ஜனாதிபதி பேரினவாதிகளின் கையில் சிக்குண்டுள்ளார்-சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்


பெரும்பான்மை சமூகத்தின் பெரும்பாலானவர்கள் அதிகாரப் பரவலாக்கலை ஆதரிக்கிறார்கள். அச்சமூகத்தில் சிறு தொகையினரே இதனை எதிர்க்கிறார்கள். 

அவர்கள் பேரினவாதிகளாவர். ஆனால் ஜனாதிபதி பேரினவாதிகளின் கையில் சிக்குண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி செயலாளர் நாயகமும் கல்முனை பிரதி முதல்வருமான சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் தெரிவித்தார்.

நிஸாம் காரியப்பர் சகோதர இணையத்துக்கு வழங்கிய விஷேட பேட்டியொன்றிலே மேற்கண்டவாறு கூறினார். அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில் ‘ஜனாதிபதியிடம் பேரினவாதிகளின் குரல் ஓங்கியுள்ள நிலையிலே மாகாண சபைகளின் அதிகாரங்களைப் பறிப்பதற்காக 13ஆவது திருத்தச் சட்டத்தில் கை வைக்கப்பட்டுள்ளது.

 இச்சட்டத்தில் கை வைப்பதற்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு போதும் துணை போகாது. கிழக்கு மாகாண சபையில் இதற்கான பிரேரணை கொண்டு வந்தால் எதிர்த்து வாக்களிக்கும். இது விடயத்தில் மாகாண சபை உறுப்பினர்கள் ஏழு பேரும் உறுதி பூண்டுள்ளார்கள்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசுடனுள்ள நம்பிக்கையை இழக்கக் கூடாது என்ற அடிப்படையிலே கிழக்கு மாகாண சபையில் ஆட்சியமைக்க அரசுக்கு ஆதரவு வழங்கியுள்ளது. சிலவேளை அரசுக்கு ஆதரவு வழங்காமல் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்கியிருந்தால் எல்லா பழியையும் முஸ்லிம் காங்கிரஸின் தலையில் சுமத்தியிருப்பார்கள். 

கடைசிக்கட்டம் வரை அரசுடன் இருந்து போராட வேண்டிய தேவை இருக்கிறது. கிழக்கில் பிள்ளையான் காலத்திலிருந்து இன்றுவரை 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த கிடைத்த சந்தர்ப்பங்கள் கைநழுவப்பட்டுள்ளன என்றார்.VV
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :