வீடு உடைத்து கொள்ளையிட்ட பல்கலைக்கழக பொருளியல் பீட மாணவன் கைது


வீடு உடைத்து கொள்ளையிட்ட சம்பவம் ஒன்றுடன் தொடர்புபட்டார் என்ற சந்தேகத்தின் பேரில் பேராதனை பல்கலைக்கழக பொருளியல் பீட மாணவன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பேராதனை பொலிஸ் குழுவொன்றிற்கு கிடைக்கப் பெற்ற தகவலின்படி இம்மாணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது பேராதனை பிரதேசத்தில் இவ் வருடம் இடம்பெற்ற 8 பொருட் கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் கடந்த வருடம் இடம்பெற்ற 9 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவர் வலப்பன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதான இளைஞன் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் கண்டி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பேராதனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :