கல்லறையில் இருந்து சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து பாலியல் உறவு

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருந்த சிறுமியின் சடலத்தை தோண்டி எடுத்து, கொடூரமாக பாலியல் உறவு கொண்ட மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

குஜன்வாலா மாவட்டம் கிலா டேடார் சிங் பகுதியைச் சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவி ஒருவர், நேற்று முன்தினம் தனது வீட்டில் உள்ள குளியலறையில் குளித்தபோது, மின்சாரம் தாக்கி இறந்தார். இறுதி மரியாதைக்குப் பிறகு அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில், நேற்று காலையில் அந்த மாணவியை புதைத்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்காக அவரது உறவினர்கள் கல்லறைத் தோட்டத்திற்கு சென்றனர். அப்போது அங்கு அலங்கோலமாகக் கிடந்த மாணவியின் உடலைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

புதைக்கப்பட்டிருந்த அந்த மாணவியின் சடலத்தை யாரோ மர்ம ஆசாமிகள் தோண்டி எடுத்து உடலுறவு கொண்டது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உறவினர்களை சமாதானம் செய்தனர். மேலும், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்ப முடியாது என்று உறுதி அளித்தபிறகே அவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக கல்லறைத் தோட்டத்தின் வெட்டியானிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘பெண் என்றால் பேயும் இரங்கும்’ என்பார்கள். பெண்ணுக்கு இரங்காதவர்கள்கூட பெண்ணின் பிரேதத்தைப் பார்த்தால் இரக்கம் கொள்வார்கள். ஆனால், அந்த பிரேதத்தையும் இங்கே விட்டு வைக்கவில்லை. இத்தகைய காமுகர்களின் வக்கிர புத்திக்கு எத்தகைய தண்டனை கொடுத்தாலும் தகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :