இளவரசனின் மரணம் தற்கொலை தான் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு


மிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தருமபுரி இளவரசனின் மரணம் தற்கொலை தான் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் குழு உறுதிபடுத்தியுள்ளது.


தருமபுரி இளவரசன் கடந்த 4ம் திகதி இரவு ரயில் தண்டவாளம் அருகே பிணமாக கிடந்தார்.

இளவரசன் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் கொலை செய்து விட்டார்களா? என்பது குறித்து தமிழகம் முழுவதும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில் இளவரசனின் சடலத்தை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என அவரது தந்தை மனுத்தாக்கல் செய்தார்.

இதனையடுத்து, டெல்லியில் உள்ள ஏய்ம்ஸ் மருத்துவமனையின் புகழ்பெற்ற மருத்துவர்கள் குழுவை கொண்டு பிரேதப்பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் இளவரசனின் உடலை பிரிசோதனை செய்து, உயர்நீதி மன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

இந்த அறிக்கையின் நகல் தருமபுரி நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மருத்துவ பரிசோதனை அறிக்கை விபரம் தற்போது வெளியாகி உள்ளது.

அதில் இளவரசன் ஓடும் ரயிலில் விழுந்து அடிபட்டு தலை, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு இறந்துள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

அவரை யாரும் ரயிலில் தள்ளிவிட்டோ அல்லது துன்புறுத்தியோ கொன்றதற்கான எந்தவித மூகாந்திரமும் இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனால் இளவரசனின் மரணம் தற்கொலை தான் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இளவரசன் மரணம் குறித்து விசாரித்து வரும் தனிப்படை பொலிசார் பிரேதப்பரிசோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் மனு செய்து வாங்க உள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :