இன்று (10) நள்ளிரவிலிருந்து பணி பகிஸ்கரிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் கெமுனு விஜேரத்ன அறிவித்துள்ளார்.
இது ஒருநாள் பகிஸ்கரிப்பா அல்லது தொடர் பகிஸ்கரிப்பா என்பது குறித்து அவர் தெளிவான தகவலை வெளியிடவில்லை.
பஸ் கட்டண அதிகரிப்பு தொடர்பில் பல கலந்துரையாடல்களை மேற்கொண்ட போதும் இதுவரையில் எந்தவொரு தீர்வும் கிடைக்காததால் பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானத்ததாக கெமுனு குறிப்பிட்டார்.
பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து நேற்று முன்தினம் (08) ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்ற போதும் அதில் கெமுனு விஜேரத்ன கலந்து கொள்ளவில்லை.
இதேவேளை, ரயில் தொழிற்சங்க ஒன்றியம் 48 மணிநேர பணி பகிஸ்கரிப்பை அறிவித்து அதனை ஒரு நாளில் நிறைவு செய்துள்ள போதும் ரயில் சேவைகள் இன்னும் வழமைப்போன்று இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

.jpg)
0 comments :
Post a Comment