
அட்டாளைச்சேனை - மீனோடைக்கட்டு பிரதான வீதியில் இன்று காலை மோட்டார் சைக்கிளொன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
சம்மாந்துறை சவளக்கடையில் இருந்து அக்கரைப்பற்றுக்கு சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் மீனோடைக்கட்டு சந்தியிலுள்ள மின் கம்பத்தில் மோதியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் சென்ற சம்மாந்துறை சவளக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான மஹ்றூப் என்பவரே உயிரிழந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளை செலுத்திய 29 வயதுடையவர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment