கல்முனை செய்தியாளர்சாய்ந்தமருதில் மீனவர் வாசிகசாலையை திறந்த பின்னர் சபையின் அனுமதியை கேட்பது தவறான விடயம். என கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஷீர் தெரிவித்தார்.
சபையின் அனுமதியை பெற முன்னர் குறித்த அமைச்சரின் அனுமதி பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கல்முனை மாநகர சபையின் மாதாந்த அமர்வு இன்று சபா மண்டபாத்தில் இடம்பெற்றது. இதில் உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
அண்மையில் சாய்ந்தமருதில் திறக்கப்பட்ட மீனவர் வாசிகசாலைக்கு சபையின் அனுமதி பெறவில்லை. இதனை திறப்பதற்கு முன்னர் அனுமதியை பெற்றிருப்பின் குறித்த பெயர் வைப்பதில் எங்களுக்கு எந்த பிரச்சினையும் கிடையாது.
ஆனால் வாசிகசாலைக்கு பெயர் வைத்து திறந்த பிறகு சபையின் அனுமதியினை கேட்பது மாநகர கட்டளைச் சட்டதுக்கு புறம்பானது.
மாநகர கட்டளைச்சட்டத்தின் பிரகாரம் பெயர் சூட்டாமல் ஒரு தனிப்பட்ட முடிவினை எடுத்த பிறகு அதற்கு தலையசைக்க சொல்லி திணிக்கும் செயலினை ஏற்றுக்கொள்ள முடியாது.
மேலும் குறித்த வாசிகசாலை கட்டி முடிப்பதற்கு எமது மாநகர சபையின் பணத்தில் எவ்வளவினை செலவிட்டீர்கள் என்பதைகூட சபைக்கு இதுவரையில் மூடி மறைத்துள்ளீர்கள்.
இவ்வாறு சட்டத்துக்கு புறம்பாக செய்யப்பட்ட விடயத்துக்கு எங்களால் அனுமதி வழங்க முடியாது என்றும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment