அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு டிபார்ட்மென்டில் தனது வீட்டுக்கு தீ வைத்து கொண்ட ஆசாமி, அங்கு வசித்த 7 பேரை சரமாரியாக சுட்டுக் கொன்றான்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ஒரு டிபார்ட்மென்டில் தனது தாயுடன் வசிப்பவர் பெட்ரோ வர்காஸ் (42). புளோரிடா புறநகர் மியாமி அருகே ஹியாலி என்ற இடத்தில் இந்த அபார்ட்மென்ட் உள்ளது.
இங்கு நேற்று நள்ளிரவு பெட்ரோ வர்காஸ் வீட்டில் இருந்து புகை வருவதை டிபார்ட்மென்ட் மேலாளர்கள் இடாலோ பிசியாட்டி (78) மற்றும் கேமிரா பிசியாட்டி (68) ஆகியோர் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக மாடியில் இருக்கும் பெட்ரோ வீட்டுக்கு சென்றனர். அப்போது கதவை திறந்து கொண்டு பயங்கர கூச்சலுடன் வந்த பெட்ரோ, இடாலோ, கேமிரா மீது சரமாரியாக சுட்டுக் கொன்றான்.
சத்தம் கேட்டு அபார்மென்ட்டில் வசித்தவர்கள் ஓடிவந்தனர்.
ரத்த வெள்ளத்தில் இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து பயந்து போய், தங்களது வீடுகளுக்குள் சென்று கதவை அடைத்து கொண்டனர். பின்னர் டிபார்ட்மென்ட்டின்3வது தளத்துக்கு சென்ற பெட்ரோ, ஒரு வீட்டில் இருந்த தம்பதி மற்றும் அவர்களது 17 வயது பெண்ணை சுட்டுக் கொன்றான்.
அதன்பின் 5வது தளத்துக்கு சென்று பால்கனியில் நின்றபடி சாலையில் செல்வோர் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினான். அதில், நடந்து சென்ற 2 பேர் பலியானார். இதனால் அப்பகுதியே போர்க்களம் போல் ஆனது.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பெட்ரோவை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால், 2 பேரை துப்பாக்கி முனையில் பெட்ரோ பிடித்து வைத்து கொண்டார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், பெட்ரோவை சரணடையும்படி எச்சரித்தனர். ஆனால், 2 பேரை துப்பாக்கி முனையில் பெட்ரோ பிடித்து வைத்து கொண்டார்.
அதன்பின்,போலீசாருக்கும் பெட்ரோவுக்கும் இடையில் பல மணி நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் பெட்ரோவின் தாயும் படுகாயம் அடைந்தார்.
ஒரு வழியாக பெட்ரோவை போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் பெட்ரோ மனநிலை பாதிக்கப்பட்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் புளோரிடா மாகாணத்தையே உலுக்கி உள்ளது.

0 comments :
Post a Comment