சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) கட்டாயம் பதிவு செய்யவேண்டும்.


(எம்.பைஷல் இஸ்மாயில்)

நாடளாவிய ரீதியில் இயங்கிவரும்
சகல அரச சார்பற்ற நிறுவனங்களும் (NGO) தங்களின் நிறுவனங்களை கட்டாயம் பதிவு செய்யவேண்டும் எனவும் தவரும் பட்சத்தில் குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அறியக்கிடைத்துள்ளன.

இலங்கையில் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களை பதிவு செய்யாமல் இயங்கிவருகின்றன. இவ்வாறு இயங்குகின்ற நிறுவனங்கள் தங்களின் நிறுவனங்களை அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளுமாறும் இப்பதிவு செய்யும் நடவடிக்கையினை கட்டாயமாக்கப்பட்டுள்ளது எனவும் அலுவலகத்தின் பணிப்பாளரும் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளருமான லக்ஷ்மன் {ஹலுகல்ல தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களில் இயங்கிக் கொண்டிருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்கள் தங்களின் பதிவுகளை செய்யாமல் நாட்டுக்குச் சேவையாற்றும் தோரணையில் அரசையும், அரசுக்கு ஆதரவாக செயற்படுகின்றவர்களையும் கவிழ்க்கும் முயற்சியிலும், அரசுக்கு எதிரான சதித் திட்டங்களையும், சூழ்ச்சிகளையும் மேற்கொள்ளும் மோசடிகளில் ஈடுபடுகின்ற அரச சார்பற்ற நிறுவனங்களின் இரகசிய செயற்பாட்டிற்கும் நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்தும் இடமளிக்கப்படமாட்டாது.

அரச சார்பற்ற நிறுவனங்களை பதிவு செய்யும் அலுவலகத்தில் குறித்த நிறுவனம் உரிய முறையில் பதிவுகளை செய்யப்படாவிடின் அவற்றுக்கும் எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் நாட்டில் இயங்குவதற்கும் தடை விதிக்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

எனவே, இலங்கையில் பதிவு செய்யப்படாமல் செயற்பட்டுவரும் அரச சார்பற்ற நிறுவனங்கள் இதனை கவனத்தில் கொண்டு தங்களின் நிறுவனங்களை பதிவு செய்வதன் மூலம் எதிர்காலங்களில் எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :