சவுதி அரசாங்கத்தினால் கட்டிமுடிக்கப்பட்ட நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை கடந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட அக்கரைப்பற்று மக்களுக்கு வழங்குவதாகக் கூறி பல வருடங்கலாக இழுபறி நிலையிலுள்ளதை எதிர்த்து இம்மக்கள் இரு தடவைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதன்படி கடந்த வாரம் இம்மக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்துக்குள் அடாத்தாக உட்புகுந்து தங்களுக்கென கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை வழங்கும் வரை இந்த இடத்தை விட்டுச் செல்ல மாட்டோம் என்று அன்றைய தினம் பகல் மற்றும் இரவு உணவுக்கான சமையல்களை சமைத்து ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலைமையில் காணப்பட்ட மக்களிடம் உங்களுக்கான வீடுகள் உங்களுக்குத்தான் வழங்கப்படும் வேறு யாருக்கும் வழங்கப்படமாட்டாது. தயவு செய்து இவ்விடத்தை விட்டு போகுமாறு அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் வேண்டியும் அம்மக்கள் குறிப்பிட்ட இடத்தை விட்டு செல்லேவேயில்லை.
இரவு 10 மணி தாண்டியும் அம்மக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தை விட்டு போகவும் இல்லை. இந்த இக்கட்டான நிலையில் உள்ள பிரதேச செயலாளர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதியான பதிலை இன்று கொடுத்தால் மாத்திரம் தான் இந்த இடத்தை விட்டுச் செல்வார்கள் அதற்கான உறுதிமொழியை உடன் தரும்படி கோரியள்ளார்.
அந்த வகையில் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த இரவு சுமார் 11 மணியளவில் அக்கரைப்பற்று பிரதேச செயலாளரை தொடர்பு கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு சவுதி அரசாங்கத்தினால் கட்டி முடித்து கிடைப்பபெற்றள்ள நுரைச்சோலை வீட்டுகளை இன்று 2013.06.14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கையளிக்கப்படும் இது அவர்களுக்கு வழங்கும் இறுதித் தீர்வாகும் என்று அரசாங்க அதிபர் வேண்டிக் கொண்டமைக்கமைவாக பிரதேச செயலாளர் அம்மக்களிடம் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் மிகப் பொய்யான வார்த்தைகளை கேட்டு கேட்டு அழுத்துப்போய் மிகவும் பாதிக்கப்பட்ட மக்களாகிய தாங்கள் அரசாங்க அதிபரின் பொய்யான வார்த்தைகளை நம்பி நாங்கள் எதுவுமே செய்யப்போவதில்லை. என பாதிக்கப்பட்ட மக்களில் உள்ள ஒரு குடும்பப் பெண் தெரிவித்தார்.
அப்பெண்மனி மேலும் தெரிவிக்கையில்,
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வார்த்தைகளை அக்கரைப்பற்று பிரதேச செயலாளராக கடமை புரியும் நீங்கள் நம்பலாம் ஆனால் அவரின் வார்த்தைகளை பல தடவைகள் நம்பி நம்பி அம்பாறை மாவட்ட கச்சேரிக்கு பல மாதங்கள் அழைந்து தெரிந்து ஏமாற்றப்பட்டுள்ளோம். அதனால் அவரின் பொய்யான வார்த்தைகளை நாங்கள் நம்பத் தயாரில்லை. என்று தெரிவித்தமைக்கு அமைவாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் தனது கைப்பட ஒரு உறுதியான கடிதத்தை எழுதி தங்களிடம் வழங்கி எங்களை அனுப்பி வைத்தார். என அப்பெண்மனி மேலும் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட இம்மக்களுக்கு இறுதி வாக்குருதி அளிக்கப்பட்டு குறித்த தினமான இன்று அக்கரைப்பற்று பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்ட கடிதத்தின் பிரகாரம் இன்று வந்த மக்களுக்கு மேலும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளதை மனம் வருந்தியவர்களாக பிரதேச செயலாளரினால் வழங்கப்ட்ட கடிதத்தினை வைத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்ட அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டவைகள் பின்வருமாறு,

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் அறிவுருத்தல்களுக்கமைவாக சுனாமியினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கான வீடுகளை தகுதியானவர்களுக்கு நுரைச்சோலை வீட்டுத் திட்டத்தில் வீடுகளை வழங்க 2013.06.14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தங்களுக்கான வீடுகளை கையளிக்கின்றோம் என்பதை அறியத்தருகின்றோம். என குறிப்பிடப்பட்டு அக்கரைப்பற்று பிரதேச செயலாளரின் கையொப்பமிடப்பட்டு இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வார்த்தைகளை பல தடவைகள் நம்பி நம்பி ஏமாற்றமடைந்த பொதுமக்கள் அக்கரைப்பற்று பிரதேச செயலாளராகி அவர் அரசாங்க அதிபரின் வார்த்தையை நம்பிய அவர் பொதுமக்களிடம் மிக திடமான வாக்கை இவ்வாறு தெரிவித்துள்ளார். நிச்சயமாக 14 ஆம் திகதி உங்களுக்கான வீடுகளை அரசாங்க அதிபரினால் கையளிக்கப்படும் என எவ்வளவோ எடுத்துக்கூறியும் அதை ஏற்றுக் கொள்ளாத மக்கள் எழுத்து மூலம் பெற்றுக் கொண்டார்கள்.
அவ்வாறு பெற்றுக்கொண்டும் பாதிக்கப்பட்ட மக்களுக்கான வீடுகள் குறிப்பிட்ட திகதியான இன்று 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிடைக்கப்பெறவில்லை.
அதன் நிமித்தம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் நேற்று அக்கரைப்பற்று பிரதேச செயலக வலாகத்தில் தங்களின் ஆவேசமான வார்த்தைகளை பிரயோகித்து தங்களுக்கான வீடுகளை வழங்கக்கோரி நிற்கின்றனர்.
அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வார்த்தையை நம்பி பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு எழுத்து மூலம் தனது இறுதி வாக்குருதியை வழங்கியிருந்தார். இதனை ஏற்றுக்கொள்ளாத மக்கள் குறித்த தினம் பிரதேச செயலாளரின் இறுதி வார்த்தையும் இறுதி முடிவும் எனறு சொன்ன அவரின் வார்த்தையால் மொழியப்பட்ட கடிதத்தின் நம்பிக்கையில் சென்ற மக்களுக்கு இன்று வீடுகளை கொடுக்க மருக்கும் அரசாங்க அதிபரின் செய்கையால் அக்கரப்பற்று பிரதேச செயலாளர் இன்றைய தினம் பிரதேச செயலகத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் அங்கு கூடியிரந்த பொதுமக்கள் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொன்ன வார்த்தையும், இதை ஊடகவாயிலாக கட்டாயம் தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கொண்டதும்,
கடந்த சுனாமியினால் பாதிக்கப்பட்ட தாக்கத்தை விட இந்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரின் வார்த்தையை நம்பி நம்பி அம்பாறை மாவட்ட கச்சேரிக்கும் அவர் சொல்லும் இடங்களுக்கும் அழைந்து தெரிந்து நம்பி நம்பி பாதிக்கப்பட்ட நிலைமையே மிக அதிகம் எனவும் அம்மக்கள் விசனத்துடன் தெரிவிக்கின்றனர்.

.jpg)
0 comments :
Post a Comment