சுகாதார அமைச்சரே இது உங்கள் அவதானத்திற்கு.


(முசலியூர் .கே.சி.எம்.அஸ்ஹர்)

இன்று எமது நாட்டின் பல வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் மூலம் குழந்தைகளைப்பெற்றுக் கொள்ளும் நடைமுறை பல காலமாக நடந்துவருகின்றது.

இயற்கையாகப் பிரசவிக்கமுடியாத கர்ப்பிணிகளுக்கே இச்சத்திரசிகிச்சைசிபாரிசுசெய்யப்படுகிறது.

இச்சத்திர சிகிச்சையைமேற்கொள்பவர் ஒரு பெண்ணியல் மருத்துவராகவே இருக்கவேண்டும்.

இச்சத்திரசிகிச்சைகளின் போது தாயையும்,குழந்தையையும் பாதுகாக்க வேண்டிய கடப்பாடுமருத்துவர்களுக்கு உண்டு.

ஆனால் அண்மைக்காலமாக ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் எம்மை நடுங்கச்செய்கின்றன.

சத்திரசிச்சைஉபகரணங்களைதவறாக உள்ளேவைத்துத் தைத்தபின்னர் மீண்டும் தையலைப்பிரித்து அவற்றை மீள எடுத்தசம்பவங்கள்.
திருகோணமலைமாவட்டத்தில் உள்ள ஒரு வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்குஉட்பட்டபின் தாய் கோமாநிலைக்குச்சென்றுள்ளார்.

இதனால் பிள்ளையைக் கஷ்டப்பட்டுவளர்;க்கவேண்டியநிலைக்குத் தந்தைதள்ளப்பட்டுள்ளார்.இவை சில உதாரணங்கள் மட்டும்தான் நாடளாவியரீதியில் பலசம்பவங்கள் இடம்பெற்று;ள்ளன.
சில வைத்தியசாலைகளில்சாதாரணவைத்தியர்கள் இப்படியான சத்திரசிகிச்சைகளைச் செய்வதாக மக்கள் மக்கள் குறிப்பிடுகின்றனர்.

உயிர்களுடன் விளையாடும் விளையாட்டுக்கள் நிறுத்தப்படவேண்டும்,மகப்பேற்றுச்சத்திரசிகிச்சையை,பெண்ணியல் மருத்துவர் தவிர்ந்த வேறு யாரும் மேற்கொள்ளக் கூடாதெனச் சுகாதார அமைச்சர் கண்டிப்பானஉத்தரவைப்பிறப்பிக்கவேண்டுமென மக்கள் வேண்டிநிற்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :