பசிபிக் கடலில் அவுஸ்திரேலியா அருகே பப்புவா நியூசினியா நாடு உள்ளது. இங்குள்ள ஒரு கிராமத்தில் 40 வயது மதிக்கதக்க ஒருவர் வசித்து வந்தார். அவருக்கு 3 மகள்கள் உள்ளனர். காமவெறியரான அவர் வீட்டில் மனைவி இல்லாதபோது தனியாக இருக்கும் தனது மகள்களை கற்பழித்து வந்தார்.
சம்பவத்தன்று, இரவு அவரது 18 வயது மகள் தனியாக இருந்தாள். அவளை பலாத்காரம் செய்து அவர் கற்பழித்தார். மறுநாள் காலையிலும் அப்பெண்ணை மீண்டும் கற்பழிக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பெண் புதர்களை வெட்ட பயன்படுத்தும் கத்தியால் தனதுதந்தையின் கழுத்தை துண்டாக வெட்டி கொலை செய்தாள்.
நடந்த சம்பவம் குறித்து தனது கிராம தலைவர்களிடம் கூறி தஞ்சம் அடைந்தாள். இதற்கிடையே, தகவல் அறிந்ததும் பொலிஸார் அங்கு விரைந்து வந்தனர். ஆனால், அவளை பொலிஸாரிடம் கிராம மக்கள் ஒப்படைக்கவில்லை. மாறாக, காமக்கொடூர தந்தையை கொன்ற பெண்ணுக்கு ஆதரவு தெரிவித்து பாதுகாப்பு அளித்து வருகின்றனர்.

0 comments :
Post a Comment