காத்தான்குடி நகர சபைத் தலைவரையும் உறுப்பினர் ஒருவரையும் கைது செய்ய உத்தரவு.

காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரையும் கைது செய்யுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி என்.எம்.அப்துல்லா இன்று காத்தான்குடி பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானது என தெரிவிக்கப்படும் மைய்யவாடிக் காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்த வழக்கு தொடர்பில் காத்தான்குடி நகர சபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர்களையும் 18ம் திகதி இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்திற்கு சமூகமளிக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பானை அனுப்பியிருந்தது.

மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதிவாளரினால் இந்த அழைப்பானை அனுப்பப் பட்டிருந்தது.

இந்த அழைப்பானைக்கு காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் அதன் உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரும் சமூகமளிக்கத்ததால் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி இவர்கள் இரவரையும் கைது செய்யுமாறு பிடியானை பிறப்பித்தார்.

கடந்த மே மாதம் 11ம் திகதி காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானதென கூறப்படும் மையயவாடிக்காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்துக் கொண்டிருந்த போது அவ்விடத்தில் பொதுமக்கள் திரண்டு வேலி போடுவதை தடுக்க முற்பட்ட போது அங்கு கலவரம் ஏற்பட்டது.

இது தொடர்பான வழக்கு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது.

காத்தான்குடி நகர சபை பிரதி தவிசாளர் எம்.ஐ.எம்.ஜெஸீம், மற்றும் காத்தான்டி நகர சபை உறுப்பினர்களான அலிசப்ரி, மற்றும் றஊப் ஏ.மஜீத், எச்.எம்.எம்.பாக்கீர், சல்மா அமீர் ஹம்சா, அஷ்ஷெய்க் ஏ.எல்.எம்.சபீல் நழீமி, எம்.நசீர் ஆகியோரும் பள்ளிவாயல் சார்பில் அதன் தலைவர் இஸ்மாயில் உட்பட அதன் நிருவாக சபை உறப்பினர்களும் இன்றைய வழக்கின் போது சமூகமளித்திருந்தனர்.

இந்த வழக்கை அடுத்த மாதம் 2ம்திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி என்.எம்.அப்துல்லா அன்றைய தினம் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்கள் அனைவரையும் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

இன்றைய வழக்குக்கு சமூகமளிக்கத்தவறிய காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர் எம்.எஸ்.ஸியாத் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் காத்தான்குடி பொலிசாருக்கு நீதிபதி அப்துல்லா இதன் போது உத்தரவிட்டார்.

கடந்த மே மாதம் 11ம் திகதி காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும் ஆ பள்ளிவாயலுக்கு சொந்தமானதென கூறப்படும் மையவாடிக்காணிக்குள் கட்டிடம் கட்டுவதற்காக காத்தான்குடி நகர சபை அந்த காணியினை வேலி போட்டு அடைத்துக் கொண்டிருந்த போது அவ்விடத்தில் பொதுமக்கள் திரண்டு வேலி போடுவதை தடுக்க முற்பட்ட போது அங்கு ஏற்பட்ட கலவரத்தில் மூன்று பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :