பாடசாலை ஆசிரியையை முழங்காலில் நிறுத்தி தண்டனை வழங்கிய வட மேல் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமார ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இவர் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடுவதற்கும் கட்சி தடை விதித்துள்ளது.
இந்நிலையில் ஆனந்த சரத்குமார தனது வட மேல் மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்பட்டுகிறது.
பாடசாலை மாணவிகள் சிலர் குட்டைச் சட்டை அணிந்திருந்தமை தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கிய ஆசிரியையை முழங்காலில் நிறுத்திய சம்பவம் தொடர்பில் ஆனந்த சரத்குமார கைது செய்யப்பட்டு எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஆசிரியையால் அறிவுறுத்தல் வழங்கப்பட்ட மாணவிகளில் இவரது மகளும் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியை ஒருவரை முழங்காலில் நிறுத்தி வைக்கப்பட்டமை கல்விச் சமூகத்தையே கலங்கடித்த சம்பவம் எனக்கூறி கண்டனங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
இந்நிலையில் மாகாண சபை உறுப்பினர் ஆனந்த சரத்குமாரவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் குறித்த அறிக்கை இலங்கை சுதந்திரக் கட்சியின் செயலாளரும் சுகாதார அமைச்சருமான மைத்திரிபால சிறிசேனவினால் வெளியிடப்பட்டிருந்தது.

0 comments :
Post a Comment