பல்கலைக்கழகங்கள் கிடைக்காதவர்களுக்கு மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களில்அனுமதி.

யர்தரப் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கு கடன் உதவி அல்லது புலமைப் பரிசில் வழங்கி மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களில் அனுமதிக்க பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.
இவர்களுக்காக பிரத்தியேக மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்கள் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் க்ஷனிக்கா ஹிரிம்புரேகம தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள போட்டித் தன்மையைக் கருத்திற்கொண்டு இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், ஏனைய வழமையான மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களைப் போன்றே உரிய தரத்துடன் அவை பேணப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
மிகவும் குறைந்தளவிலான புள்ளிகள் வித்தியாசத்தில் மருத்துவ மற்றும் பொறியியல் பீடங்களில் அனுமதி பெறத்தவறும் மாணவர்களுக்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. பல்கலைக்கழக பீடங்களுக்குப் பொறுப்பாகவுள்ள அதிகாரிகள் அடங்கிய குழுவொன்றின் ஊடாக மாணவர்கள் தெரிவு செய்யப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :