பௌத்த இராணுவக் குழுவாக உருவாக பொதுபல சேனா முயற்சித்து வருவதாக அமைச்சர் ராஜித சேனாரட்ன குற்றம் சுமத்தியுள்ளார்.பௌத்த தர்மம் இனவாதத்தை போஷிக்கவில்லை எனவும், பொதுபல சேனா போன்ற அமைப்புக்கள் கடும்போக்குடைய கொள்கைகளை பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாத்தறை குடாவெல்ல பிரதேசத்தில் நடைபெற்ற கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் அங்கு கருத்துத் தெரிவிக்கையில், பொதுபல சேனா அமைப்பின் நடவடிக்கைகள் பௌத்த நெறிமுறைகளுக்கு முரணானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.பொது பல சேனாவின் நடவடிக்கைகளை பார்வையிட புத்த பகவான் உயிரோடு இல்லாமை நல்லதே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜே.வி.பி வன்முறைகள் இடம்பெற்ற காலத்திலேயே தாம் அரசியலை முடிவுறுத்திக் கொள்ளவில்லை பொது பல சேனா அமைப்பின் எச்சரிக்கையை பெரிதாக கருதப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :
Post a Comment