பெருமதிப்பிற்குரிய கத்தார் மக்களே, விருப்பத்திற்குரிய எனது நாட்டு மக்களே, உங்கள் அனைவர் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக.நமது நாட்டு வரலாற்றில் ஒரு புதிய சாகாப்தத்திற்கு நுழையும் இன்றைய நாளில் நான் உங்கள் முன் உரையாற்றுகின்றேன்.
நீங்கள் இந்த நாட்டின் உரிமையாளர்களாக, அதன் காவலர்களாக, அதன் செழிப்பின் பங்குதாரர்களாக அதன் எதிர்காலமாக இருப்பதால் நான் உங்கள் முன் முதலில் உரையாற்ற விரும்பினேன்,
எனது சக நாட்டு மக்களே! நான் எமது தேசத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் போதும், மக்களுக்காக சேவை செய்யும் போதும் அது எப்போதும் என் இதயத்தில் ஆக்கிரமித்த நம்பிக்கையாக இருந்தது.
எல்லாம் வல்ல இறைவனுக்குத் தெரியும் நான் ஒரு பொருட்டுக்காக ஆட்சி அதிகாரங்களுக்கு ஆசைப்பட்டவன் அல்ல, அல்லது தனிப்பட்ட நோக்கங்களுக்காக ஆட்சி செய்ய முயற்சித்தவன் அல்ல. ஆனால் எனது கடப்பாடு எப்போதும் நாட்டின் மீதான அக்கறையிலேயே தங்கியிருந்தது, இந்த கடப்பாடு எம்மை ஒரு புதிய தசாப்தத்திற்கு இட்டுச் சென்றது.
தற்பொழுது நமது நாட்டின் வரலாற்றில் மாற்றத்திற்கான நேரம் வந்துள்ளது, புதிய தலைமுறையினர், ஆக்கப்பூர்வமான சிந்தனையுடன் பொறுப்புக்களை தங்கள் தோள்களில் சுமப்பதற்காக முன்னோக்கி வந்துள்ளனர்.
உறுதியான, மனோபலம் மிக்க, தேவையை உணர்ந்த, புதியவைகளுக்கு ஒத்துப்போகும் போக்குடைய, தெளிவான சிந்தனை மற்றும் படைப்பாற்றல் உள்ளவர்களாக எமது இளைஞர்கள் கடந்த காலங்களில் தமது திறமைகளை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது எல்லாவற்றிற்கும் எமது நன்றிகள், நான் மீட்டிப்பர்க்கின்றேன் நான்காவது கலீபா அலி இப்னு அபி தாலிப் (ரலி) அவர்கள் கூறினார்கள், “நீங்கள் கற்றதை விடவும் உங்களின் பிள்ளைகளை கற்பியுங்கள், ஏனெனில் அவர்கள் உங்களது காலத்திற்கு இல்லாமல் வேறு ஒரு காலத்திற்கு உருவாக்கப்பட்டிருக்கின்றனர்.
நீங்கள், எமது பிள்ளைகள், இந்த நாட்டின் ஆயுதமாக, அதன் நிகழ்காலத்தின் கட்டமைப்பாக, அதன் எதிர்காலத்தை தாங்குபவர்களாக காணப்படுகின்றீர்கள். நாங்கள் எப்போதும் உங்களை பற்றி பெருமையாக நினைக்கின்றோம், உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளோம், நீங்கள் உங்களது நடவடிக்கையால் இந்த நாட்டை தலைமை தாங்குவதற்கு தகுதியானவர்கள் என்று எமது நம்பிக்கையை வென்றவர்களாக நிருபித்துள்ளீர்கள்.
எனது சக கத்தார் நாட்டவர்களே! நான் எனது தாய்நாட்டிற்கும் அதன் மக்களுக்கும் சேவை செய்யும் நோக்கில் மற்றொரு பதவி நிலைக்கு செல்லவுள்ள வேளையில், எனது கடமைகளை நம்பிக்கையுடன் நேர்மையாக முதலில் இறைவனை திருப்திப்படுத்தக் கூடிய வகையிலும், நீங்கள் என்மீது வைத்த நம்பிக்கையை திருப்திப்படுத்தக் கூடிய வகையிலும் செய்துள்ளேன் என்று நன்புகின்றேன்.
நான் செய்த அனைத்து நல்ல செயல்களும், சாதனைகளும் இறைவன் கிருபையால் மற்றும் வழிகாட்டுதலால் நடைபெற்றன. ஏதாவது தவறுகள் அது எனது தவறுகளே, எனக்கு பின்னால் பொறுப்புகளை பாரம் எடுப்பவர்கள் அதில் இருந்து பாடத்தை கற்றுக்கொள்வார்கள் என்று நான் நம்புகிறேன்.
நான் இன்று உங்களுக்கு உரையாற்றுகின்ற நிலையில், எனது அதிகாரத்தை ஷேக் தமீம் பின் ஹாமத் அல் தானி அவர்களுக்கு உப்படைக்கின்றேன் என இங்கு பிரகடனம் செய்கின்றேன். நான் முழுமையாக நம்புகின்றேன் அவர் பொறுப்புக்களை பாரம் எடுக்கக் கூடியவராகவும், நம்பிக்கைக்கு தகுதியானவராகவும், பொறுப்புக்களை தனது புயங்களில் சுமக்க திறன்மிக்கவராகவும், பணியை பூர்த்தி செய்யக்கூடியவராகவும் காணப்படுகின்றார்.
நீங்கள் எப்போதும் எனது மக்கள் என்றவகையில் நீங்கள் அவருக்கு துணையாக இருப்பீர்கள் என்று நான் முழுமையாக நம்புகின்றேன், ஏனெனில் மரபு வழியாக எமது நாட்டில் ஆட்சியாளர் மற்றும் மக்கள் மத்தியில் ஒரு ஆழமான உறவு மற்றும் ஒற்றுமை காணப்படுகின்றது.
எதிர்காலம் உங்கள் முன்னே உள்ளது, இந்த நாட்டின் பிள்ளைகளே! எதிர்கால தலைமுறையினரின் அபிலாஷைகளை மனதில் தாங்கி, அவற்றை அடைய ஒய்வு எடுக்காமல் அயராது உழைக்கும் நிலையில், முதலில் இறைவனிடமும் பிறகு மக்களிடமும் வழிகாட்டல் மற்றும் ஆதரவு தேடியவராக, இளம் தலைமை கொடியை ஏற்றுகின்றவேளை நீங்கள் ஒரு புதிய சகாப்தத்தை வரவேற்கின்றீர்கள்.
நீங்கள் பொறுப்புகளுக்கு தகுதியானவர் என்று நான் நம்புகின்ற அதேவேளை, கடின உழைப்பாலும் அறிவை தேடியவராகவும் இறைவனுக்கு பயப்படுமாறு உங்களை கேட்டுக்கொள்கிறேன்
இந்த நாட்டுக்கு சேவை செய்வதில் கடின உழைப்பு உங்கள் பழக்கமாக இருக்கட்டும். தன்னிறைவு அல்லது தயக்கம் என்பன உங்களை திசை மாற்றுவதில் இருந்தும் விலகி இருங்கள்.
நாட்டு மக்களால் கடுமையான பணிகளை மேற்கொள்ளாமல் நிகழ்கால மற்றும் எதிர்கால தலைமுறைகளுக்கு ஏற்ற சிறந்த நாடுகளை ஏற்படுத்த முடியாது
எனக்கு பூரண நம்பிக்கை இருக்கின்றது உங்களது விசுவாசத்திலும் அரபு மற்றும் முஸ்லீம் அடையாளத்திலும். எமது மார்கத்தில் இருந்தும், அரபு அடையாளத்தில் இருந்தும், எமது மனிதாபிமானத்தில் இருந்தும் பெற்ற பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும்பாதுகாக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் நாம் நம்புகின்றோம் அரபு உலகம் ஒரு மனிதனின் உடம்பு போன்றது, ஒரு ஒத்திசைந்த அமைப்பு; அதன் அனைத்து பகுதிகளிலும் வளமான இருந்தால் அது வளமாக இருக்கும்..
உங்களை நேரான வழியில் செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
0 comments :
Post a Comment