(எம்.எம். ஆதில்)
அனைத்து விடயங்களிலும் கிழக்கு மாகாண மக்கள் ஓரங்கட்டப்பட்டு மற்றவர்களின் வால்கள் போன்று பார்க்கப்படுகிறார்கள் என அல்ஜஸீறா பத்திரிகை ஆசிரியர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அண்மையில் கொழும்பில் தேசிய ஷுறா சபையினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போதே இவ்வாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
இங்கு நான் ஓர் ஊடகவியலாளனாகவே அழைக்கப்பட்டுள்ளேன். அதனால் ஊடகவியலாளனாகவே
பேசுகின்றேன் என சொல்லிக்கொள்வது ஒரு வகை தற்காப்பாக இருக்கும். ஏனென்றால் இங்கு தேசிய ஷுறா சபை பற்றி கூறிய அந்த அமைப்பினர் இதில் அரசியல்வாதிகளுக்கு இடமில்லை என அடிக்கடி திருப்பித்திருப்பி கூறினார்கள். இது ஜம்இய்யத்துல் உலமாவினர் இந்த உணவில் பன்றிக் கொழுப்பு இல்லை, இதில் பன்றி இறைச்சி இல்லை
ஆகவே இது ஹலால் என கூறுவது போல் தேசிய ஷுறா சபையில் அரசியல்வாதிகள் இல்லை, அதனால் இது ஹலாலானது என கூறுவது போன்று உள்ளது. என்னைப்பொறுத்த வரை அரசியல்
இல்லாமல் இலங்கை முஸ்லிம்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என்பதில் உறுதி உள்ளவன். ஆனால் நமது சுய நல அரசியல்வாதிகள் இதற்குள்
வராமல் இருப்பது மிகவும் வரவேற்கத்தக்கது.
உங்களால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு மக்கள் செவிமடுப்பார்களா? என்பதை நீங்கள் அறிய வேண்டுமாயின் நீங்கள் உங்கள் சபையை ஒரு தேர்தலில்
நிறுத்திப்பாருங்கள். அப்போது உங்களுக்கு யதார்த்தம் தெரிய வரும். அண்மையில் நடைபெற்ற ஹர்த்தால்களின் போது ஹர்த்தால் வேண்டாம் என உலமா சபை சொல்லியும் மக்கள் கேட்கவில்லை என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
நான் எனதூரில் உள்ளோரில் தொண்ணூறு வீதமானோரை எதிர்த்து அரசியல்
செய்பவன். அதனால் பலரது வெறப்;புக்குள்ளாகியுள்ளவன். எனதூரில் தொண்ணூறு வீதமானோர் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள். அந்தக்கட்சியில் சேர்ந்தால் வெல்லலாம் என்றிருந்தும் அவ்வாறான சுயநல அரசியலை எதிர்க்கும் கொள்கைவாதி
என்பதால் தேர்தல்களில் தோல்விகளை கண்டு வருபவன். ஆனாலும் உண்மை பேசும் அரசியல்வாதி என்பதற்காக கடந்த மாநகர சபை தேர்தலில் ஆயிரத்துக்கு மேற்பட்ட வாக்குகளை பெற்றதன் மூலம் எனது உண்மை அரசியலை ஏற்கும் மக்களும் இருக்கிறார்கள் என்பது திருப்தியான ஒன்று.
பொதுவாக இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டில் ஒல்லாந்தர் காலம் முதல்
பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து வருகிறார்கள். அவ்வப்போது அவற்றுக்கு தீர்வு தேட பல அமைப்புக்களை உருவாக்கியுள்ளார்கள். அவை எவற்றாலும் சரியான தீர்வு காண முடியவில்ல என்பதால்த்தான் மறைந்த தலைவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை உருவாக்கினார். கடைசியல் அதுவும் வீணாகி விட்டது.

இந்த நாட்டு முஸ்லிம்களுக்கு அன்று இளைஞர்களாக இருந்தவர்கள் வை எம் எம் ஏ,ஜமாஅதே இஸ்லாமி, தப்லீக், தவ்ஹீத், தரீக்கத் என பல அமைப்புக்களை உருவாகிகயுள்ளார்கள். கடைசியல் அவர்கள் முதுமையடைந்த போது பின்னால் வந்த இளைஞர்கள்; இயக்கத்தை உருவாக்கியவர்களை ஒதுக்கி விட்டு அவர்கள் தம் இஷ்டப்படி அவற்றை கொண்டு செல்வதைத்தான் காண முடிகிறது.
குறிப்பாக இந்த சபையிலும் கிழக்கு மாகாண இயக்கங்களை காண முடியவில்லை என்பது நாம் வழமையாக காணும் குறையாகும். இதற்காக உங்களை மட்டும் குறை கூற முடியாது.
கிழக்கு மாகாண முஸ்லிம்கள் எதிலும் வால்களாக இருப்பதையே பெருமையாக நினைக்கிறார்கள். கொழும்பை தலைமையாக கொண்ட ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் கிழக்கு வாலாக இருக்கிறது. ஜமாஅதே இஸ்லாமி, தவ்ஹீத், மீடியா போரம், கடைசியாக தேசிய ஷுறா சபை என கிழக்கு மக்கள் இவற்றுக்கு வால்களாகவே இருக்கிறார்கள்.
கிழக்கு தலைமையில் உருவான முஸ்லிம் காங்கிரசுக்கும் கடைசியில் கிழக்கு வாலாகவே மாறி விட்டது. இந்நிலையை நீக்க அம்மக்கள் முயல்வதாக தெரியவில்லை. அதனால் இந்த சபையாவது கிழக்கு மாகாண அமைப்புக்களை உள்வாங்க வேண்டும் என கூறினார்.

0 comments :
Post a Comment