
( எம்.சீ. சுபைதீன் )
கல்முனை மாநகர சபையின் 108 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டமையை முஸ்லிம் மக்கள் கட்சி வன்மையாக கண்டித்துள்ளதுடன் இதற்குரிய முழு பொறுப்பையும் கல்முனை
மேயர் ஏற்று உடனடியாக தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளது.
இது சம்பந்தமாக முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத்
தெரிவித்துள்ளதாவது,
அண்மையில் கல்முனை மேயரின் பிற்போக்கு சிந்தனைப்படி வேலைக்கு
அமர்த்தப்பட்ட 108 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை கவலை
தருவதாகும். இதற்கு காரணம் இவர்களை வேலைக்கு அமர்த்தும் போது சரியான முறைப்படி நியமனம் வழங்கப்படவில்லை என சொல்லப்படுகிறது.
இத்தகைய நிலைக்கு அரசியல் அனுபவமோ நாட்டின் சட்ட திட்டங்களோ அறியாத ஒருவர் மேயராக இருப்பதுதான் என்பதை எவரும் மிக இலகுவாக புரிந்து கொள்ள முடியும்.
கல்முனையை காலாகாலமாக ஆட்சி செய்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றில் எதுவுமே செய்ய மாட்டார்கள் அல்லது செய்தால் பிழையாக
செய்வதையே வழமையாக கொண்டுள்ளார்கள். இவர்கள் கொள்ளையடிப்பதற்கென்றே கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டுள்ளது போன்றே செயற்படுகிறார்கள்.
இதன் காரணமாக அபிவிருத்தியிலும் வளத்திலும் மிக மோசமான நிலையில் கல்முனை பின்தங்கியுள்ளது. கல்முனை நகரை சேர்ந்த வர்த்தகர்களின் வரி மூலம் கோடிக்கணக்கான நிதிகளை
பெற்றுள்ள கல்முனை நகர மக்களுக்கு அவர்கள் வழங்கும் வரிகளுக்கேற்ப சேவை நடப்பதில்லை என்றும் கல்முனை மாநகர சபை அலிபாபா கோட்டையாக உள்ளது என்றும் எமது கட்சி மட்டுமே மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து பேசி வருகிறது.
கல்முனையை காலாகாலமாக ஆட்சி செய்து வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த உறுப்பினர்கள் ஒன்றில் எதுவுமே செய்ய மாட்டார்கள் அல்லது செய்தால் பிழையாக
செய்வதையே வழமையாக கொண்டுள்ளார்கள். இவர்கள் கொள்ளையடிப்பதற்கென்றே கல்முனை மாநகர சபை உருவாக்கப்பட்டுள்ளது போன்றே செயற்படுகிறார்கள்.
இதற்கு காரணம் தேர்தலில் எந்தக்கழுதையை முஸ்லிம் காங்கிரசில் நிறுத்தினாலும் அதற்கு வாக்குப்போடுவோம் என்ற மக்களின் மடத்தனமான மனோ நிலையாகும்.
இதன் காரணமாக அபிவிருத்தியிலும் வளத்திலும் மிக மோசமான நிலையில் கல்முனை பின்தங்கியுள்ளது. கல்முனை நகரை சேர்ந்த வர்த்தகர்களின் வரி மூலம் கோடிக்கணக்கான நிதிகளைபெற்றுள்ள கல்முனை நகர மக்களுக்கு அவர்கள் வழங்கும் வரிகளுக்கேற்ப சேவை நடப்பதில்லை என்றும் கல்முனை மாநகர சபை அலிபாபா கோட்டையாக உள்ளது என்றும் எமது கட்சி மட்டுமே மக்கள் நலன் சார்ந்து தொடர்ந்து பேசி வருகிறது.
எமது இக்கருத்தை நிரூபிப்பதாகவே இத்தகைய பணியாளர் நீக்கம் இடம் பெற்றுள்ளது. இத்தகைய அநியாயத்தை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் சட்டம் தெரியாமல் ஊழியர்களை முறையற்ற விதத்தில் பணியில் சேர்த்து விட்டு தற்போது அவர்கள் தொழில் இழந்து நிற்பதற்குரிய முழு பொறுப்பையும் கல்முனை மேயர் ஏற்று தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய ணே;டும் என முஸ்லிம் மக்கள் கட்சி கேட்டுக்கொள்கிறது.
0 comments :
Post a Comment