போலி துப்பாக்கியால் மிரட்டியவர் பொலிஸாரின் தாக்குதலுக்கு இலக்கானார்.

நுராதபுரம் - தலாவ பகுதியில் இன்று அதிகாலை 1.20 அளவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் சந்தேகநபரொருவர் காயமடைந்துள்ளார்.

குறித்த சந்தேகநபரைக் கைது செய்வதற்கு முயற்சித்தபோது அவர் துப்பாக்கி முனையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இதன்போது பொலிஸார் சந்தேகநபரின் காலில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க சிறிவர்தன தெரிவித்தார்.

துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த சந்தேகநபர் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.

சந்தேகநபரிடமிருந்த துப்பாக்கி போலியானது என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

துப்பாக்கிப் பிரயோகத்திற்கு உள்ளான சந்தேகநபரிடம் இருந்த 2 சங்கிலிகள், மோதிரங்கள், மோட்டார் சைக்கிள், வெளிநாட்டு கடவுச்சீட்டு என்பன கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.N1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :