
கிண்ணியாவில் விறகு வெட்டச் சென்ற சிலரை விஷேட அதிரடிப்படையினர் கைது செய்ய முற்பட்டமையினால் அங்கு பதற்ற நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
விறகு வெட்டச்சென்ற சிலரை சட்டவிரோதமான முறையில் விறகு வெட்டி வருவதாக குறிப்பிட்டு அதிரடிப் படை யினர் மறித்துள்ளனர் . பின்னர் அவர்களை கிண்ணியா பொலிஸாரிடம் ஒப்படைக்க முற்பட்டுள்ளனர். இதன்போது பிரதேச மக்கள் அவர்களை வழி மறித்துள்ளனர். இதன்போது கிண்ணியா சூரங்கல் முகாம் அதிரடி படையினருக்கும் பொதுமக்களுக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் மக்கள் விறகு வெட்டச் சென்றவர்களை பொலிஸாரிடம் ஒப்படைக்கச் செல்வதனை தடுப்பதற்காக வீதியில் மரக்குற்றிகளை போட்டுள்ளதோடு டயர்களையும் எரித்து தடையை ஏற்படுத்தியுள்ளனர். இதனையடுத்து விஷேட அதிரடிப்படையினர் வானை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
இதேவேளை தற்போது சுமுகநிலையை ஏற்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் ஒன்று குட்டிக்கராச்சி ஜும்ஆப்பள்ளி வாசலில் இடம்பெறுகிறது. திருகோணமலை பிரதிபொலிஸ்மா அதிபர், கிண்ணியா பொலிஸார் மற்றும் கிண்ணியா உலமா சபையினரும் இக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
0 comments :
Post a Comment