இணைய ஊடகமொன்றில் பேட்டி வழங்கிய கல்முனை மேயர்,என்னையும் பற்றி சில விடயங்களை கூறியிருந்தார்.
கல்முனை மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எனது கோரிக்கைக்கு; சரியான பதிலை தராது தனிப்பட்ட வகையில் என்னைப்பற்றி; அறிக்கை விட்டிருந்தார். அதற்குரிய பதிலை நான் வெளியிட்டிருந்தேன். ஆனாலும் அதனை சில ஊடகங்கள் மேயரின் விளம்பர பணத்துக்கு அஞ்சி வெளியிடவில்லை.
அதில் விசேசம் என்னவென்றால் முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் ஊடகங்கள் சிலவும் எனக்கான மேயரின் அறிக்கையை வெளியிட்ட விட்டு அதற்கான எனது பதிலை இருட்டடிப்பு செய்ததுதான். பெரும்பான்மையினரின் ஊடக அதர்மம் பற்றி வாய்கிழிய கத்தும் எம்மவர் ஊடக தர்மத்தை மீறுவது கவலைக்குரிய விடயம்.
நான் பிரபல்யம் அடைவதற்காக மேயர் பற்றி அறிக்கைவிடுவதாக கூறுவது சிரிப்பை தருகிறது;. இனி தேவையில்லை என்ற அளவுக்கு அள்ளாஹ்வின் அருளால் தேசத்தில் மட்டுமல்ல சர்வதேசத்திலும் நான் பிரபல்யமடைந்துள்ளேன். ஏன்டா பிரபல்யம் அடைந்தோம் என கவலைப்பட்டுக்கொண்டிருப்பவன். பத்து லட்சம் பிரதிகள் கொண்ட மதீனாவில் அச்சிடப்பட்ட அல்குர்ஆன் தமிழ் தர்ஜுமாவிலேயே எனது பெயர் இருக்கும் போது மேயரை விமர்சித்து பிரபரல்யம் அடைய வேண்டுமா? இன்ஷா அள்ளா கியாம நாள் உள்ளவரை அந்த தர்ஜமாவும் அதில் எனது பெயரும் இருக்கும், அது எனக்குப்போதும். என்னைப்பொறுத்த வரை இந்த சமூகத்தை ஏமாற்றுபவர் யாராக இருந்தாலும் அவருக்கெதிராக எனது பேனா முனை போர்வாள் போராடும்.
கல்முனை ஊழியர்களை வேலையிலிருந்து நீக்கியதையே எமது கட்சி கண்டித்;திருந்ததே தவிர புதிதாக வேலைக்கு அமர்த்தப்பட்டதை அல்ல. இது பற்றி எமக்கு தலையும் வாலும் தெரியாது என்றால் பின்வரும் விடயங்கள் ஏன் இடம்பெற்றன என கேட்கின்றோம்.
1. புதிதாக வேலைக்கு சேர்வோர் க பொ த சித்தியடைந்திருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை வந்துள்ளது என்றால் பத்து வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தவர்களை ஏன் திடுதிப்பென பணி நீக்கம் செய்ய வேண்டும்?
2. பத்து வருடங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்தோர் எட்டாம் வகுப்பு போதும் என்ற அன்றைய சட்டத்துக்கு ஏற்பவே அவர்கள் வேலைக்கு சேர்க்கப்பட்டிருந்தார்கள் என மேயர் அறிக்கை விடடிருந்தார். அப்படியாயின் அன்றிருந்த சட்டப்படி சேர்க்கப்பட்ட அவர்கள் ஏன் புதிய சட்டப்படி வேலை நீக்கம் செய்யப்பட வேண்டும்? இது யாரின் தவறு?
3. அதுவும் அவர்கள் தற்காலிக ஊழியர்களே தவிர நிரந்தர ஊழியர் அல்ல. புதிதாக வந்த சுற்றறிக்கை விதிகள் புதிதாக நிரந்தரமாக பணியாற்றவிருப்போருக்கேயாயின் தற்காலிக ஊழியர் தொடர்ந்து தற்காலிகமாகவே பணி புரியலாம். அப்படியிருந்தும் மேயர் அவர்களை நீக்கியது ஏன்?
4. இதுவெல்லாம் சுற்றறிக்கையில் என்ன உள்ளது என்பதை புரியாததுதான் காரணமா?;. அதாவது சட்டம் தெரியாமல் சுற்றறிக்கையை வாசித்து விளங்கவும் தெரியாமல் இது நடந்தள்ளது. இதனை பணியாளர்களை மீண்டும் வேலைக்கு அமர்த்தியதன் மூலம் புரிகிறது. சட்டத்துக்கு புறம்பான முறையில் அவர்கள் வேலை செய்பவர்கள் என கருதப்பட்டு நீக்கப்பட்டார்களாயின் மீண்டும் எந்தச்சட்டத்தின் அடிப்படையில் வேலைக்கு மீண்டும் அமர்த்தப்பட்டனர்?
5. ஆர்ப்பாட்டம் செய்தால் மீண்டும் வேலைக்கு சேர்க்கலாம் என்று சட்டம் உள்ளதா?
ஆக கல்முனை மாநகர ஊழியர்கள் வேண்டுமென்றே முட்டாள்த்தனமாக பணிநீக்கம் செய்யப்பட்டு பின்னர் அவர்களின் ஆர்ப்பாட்டம், மேயர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற எமது கடுமையான கண்டனம் காரணமாக மீண்டும் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள் என்பதே உண்மை. அல்லது வேறு ஏதும் கொடுப்பனவுகள் நடந்ததா என்பது விளக்கப்பட வேண்டும். இவ்வாறு மேயர் மக்களினதும் தொழிலாளிகளினதும் உரிமைகளில் விளையாடுவதை தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.
கல்முனையின் இந்த நிலைக்கு மேயர் மட்டும் காரணமல்ல. மூவாயிரம் ரூபா பணத்துக்கும் ஒரு சாறத்துக்கும் ஏமாந்து வாக்களித்த மக்களும்தான் காரணம். முஸ்லிம் காங்கிரசில் ஜிம்மி என்ற ஒரு கோடீஸ்வர நாயை வேட்பாளராக நிறுத்தி விட்டு ஆளுக்;கு இரண்டாயிரம் பணத்தை கொடுத்தால் மக்கள் அந்த கட்சிக்கு வாக்களித்து ஜிம்மியை மேயராக்குவார்கள் என்ற நிலைதான் உள்ளது. இந்த நிலை மாற கல்முனை மக்கள்தான் முயற்சி எடுக்க வேண்டும். ஆனாலும் மக்கள் மத்தியில் தன்மானமும், உண்மையான அரசியலும் வளர்ந்து முஸ்லிம் அரசியலுக்கான தலைமை கல்முனைதான் என்பதை உணர்ந்து வரும் மக்களும் இப்போது கல்முனையில் அதிகமாகிக்கொண்டிருக்கிறார்கள் என்பதையும் இங்கு சொல்லத்தான் வேண்டும்.

0 comments :
Post a Comment