
நாட்டிலிருந்து கடந்த 4 வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முற்றாக நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் கணக்காளரிற்கு 2013.05.25ஆம் திகதியிடப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் கடிதத்தலைப்பில் அம்பாறை மாவட்ட புலனாய்வு பொறுப்பாளர் ஈழவன் எனக்குறிப்பிடப்பட்டு மிரட்டல் கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அக்கடிதம் கணக்காளரிற்கு முகவரியிடப்பட்டு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் தாங்களும் அம்பாறை மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரான அன்வர்டீன் என்பவரும் சேர்ந்து நாவிதன்வெளி பிரதேச செயலகத்தை முஸ்லிம் பிரதேச செயலகமாக மாற்றுவதற்கும், கூடுதலான முஸ்லிம் ஊழியர்களையும், தலைமை உத்தியோகத்தர்களையும் உள்ளீர்ப்பதற்கான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றீர்கள்.
இவ்வாறான நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி உங்களுக்கு உரித்தான கடமைகளில் மட்டும் ஈடுபடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்விடயம் தொடர்பாக உரிய கணக்காளர் சவளக்கடை பொலிஸில் முறப்பாடு செய்துள்ளார். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சவளக்கடை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment