
பண்டாரவளை, பூனாக்கலைத் தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவதாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக கருதப்பட்ட ஹல்துமுல்லை பிரதேச சபையின் உபதலைவர் சிங்கமுத்து அசோக்குமார் பண்டாரவளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூனாக்கலைத் தோட்டத்தில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவதாளர்கள் மீது கடந்த மே மாதம் 7 ஆம் திகதி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் பிரதான சந்தேகநபராக கருதப்பட்ட ஹல்துமுல்லை பிரதேச சபையின் உபதலைவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படுகின்ற 26 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு அனைவரும் தலா 1 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் கடந்த மே மாதம் 7ஆம் திகதி முதல் தலைமறைவாகியிருந்த ஹல்துமுல்லை பிரதேச சபையின் உபதலைவரும் இ.தொ.கா வின் உறுப்பினருமான சிங்கமுத்து அசோக்குமார் சந்தேக்ததின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் பண்டாரவளை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார்.
இந்தச் சந்தேகநபரை இன்று (19) பண்டாரவளை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பண்டாரவளை பொலிஸ் நிலையத்தின் தலைமை அதிகாரி தெரிவித்தார்.
0 comments :
Post a Comment