
அட்டாளைச்சேனையைச்சேர்ந்த அல்-ஹாஜ் யூ.எம்.வாஹிட் (சமாதான நீதவான்) அவர்கள் 18.06.2013 அன்று கல்முனை மாவட்ட நீதவான் முன்னிலையில் தமிழ்,ஆங்கில மொழிகளுக்கான அரச அங்கிகாரம் பெற்ற மொழிபெயர்ப்பாளராக சத்திய பிரமாணம் செய்து கொண்டார்.
சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட மொழிபெயர்ப்பாளருக்கான (Sworn Translator) முறையான நியமனக்கடிதமும் வழங்கப்பட்டது.
பிரபல சமூக சேவையாளரான இவர் ஆங்கில ஆசிரியராக அரச பணியில் இணைந்து பின்பு பயிற்றப்பட்ட பட்டதாரி ஆசிரியராகவும், உதவிக்கல்விப் பணிப்பாளராகவும், மாவட்டத் திட்டப் பணிப்பாளராகவும், 40 வருடம் சிறப்பான சேவையாற்றி அண்மையில் ஓய்வு நிலையைஅடந்துள்ள இவரிடம் காணப்படும் மொழியாற்றலுக்கு கிடைத்த வெகுமதியாக இந்த நியமனம் அமைகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment