இலங்கையின் அபிவிருத்திக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தொடர்ந்தும் உதவி செய்யும்.

லங்கையின் அபிவிருத்தித் திட்டங்களுக்கும் இலங்கை மக்களுக்கும் ஐக்கிய அரபு இராச்சியம் தொடர்ந்தும் உதவிகளைச் செய்யும். அத்தோடு இரு நாடுகளினதும் உறவுகள் தொடர்ந்தும் பேணப்படும் என ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் அப்துல் ஹமீட் அகே அல்- முல்லா தெரிவித்தார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைவர் கலீபா பின் செய்யத் அல்- நஹ்யான் பவுண்டேஷன், மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா பவுண்டேசனுக்கு அன்பளிப்புச் செய்துள்ள ஒன்றரை கோடி பெறுமதியான இரு வாகனங்களை கையளிக்கும் வைபவத்தில் வாகனங்களைக் கையளித்து உரையாற்றுகையிலே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

மேல் மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் நடைபெற்ற குறிப்பிட்ட நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சியத்தின் இலங்கைக்கான தூதுவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இலங்கைக்கு ஐக்கிய அரபு இராச்சியம் தொடர்ந்து தேவையான உதவிகளையும் அன்பளிப்புகளையும் வழங்கியுள்ளது. 

இலங்கை மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் மகிழ்ச்சி கொள்கிறது. சுனாமி அனர்த்தத்தின் போதும் நாம் பாரிய உதவிகளை வழங்கினோம்.

நாம் உலகில் எங்கெல்லாம் உதவி தேவைப்படுகிறதோ, அனர்த்தங்கள் ஏற்படுகிறதோ அங்கெல்லாம் உதவி செய்கிறோம். உதவிகள் செய்வதில் நாம் முந்திக் கொள்கிறோம். இன, மத வேறுபாடுகள் இன்றி சகலருக்கும் உதவிகள் வழங்கப்படுகின்றன. 

ஐரோப்பிய நாடுகளுக்கும் உதவி செய்கிறோம் என்பதை பெருமையுடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். எமது நாட்டில் பல நலன்புரி இயக்கங்கள் இயங்குகின்றன இவை அனைத்தும் உதவி தேவையானவர்களுக்கு உதவி வழங்குவதில் மும்முரமாக செயற்படுகின்றன.

இலங்கையின் அபிவிருத்திக்கும் மக்களின் சுபீட்சத்துக்கும் நாங்கள் பிரார்த்திக்கிறோம் என்றார்.

மேல் மாகாண ஆளுநர் அலவி மெளலானா பேசுகையில், மக்களின் தேவைகளையறிந்து வறிய மக்களுக்கும் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் உட்பட நாட்டு மக்களுக்கும் உதவிகள் வழங்கும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபிவிருத்திக்கும் சுபீட்சத்திற்கும் நாம் பிரார்த்திக்கிறோம்.

அலவி மெளலானா பவுண்டேஷனுக்கு அம்பியூலன்ஸ் வண்டியொன்றும் ஜனாஸா கொண்டு செல்வதற்கான வண்டியொன்றும் அனிபளிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த இரு வாகனங்களும் மேல் மாகாணத்தில் வறியவர்களின் தேவைகளுக்கு வழங்கப்படும். தேவையேற்படும் போது வசதி குறைந்தவர்கள் ஆளுநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ள முடியும் என்றார்.

நிகழ்வில் துருக்கி இன்டர் நெஷனல் கல்ச்சரல் டயலொக் பவுண்டேஷனின் தலைவர் செனான் மற்றும் பணிப்பாளர் ஹசன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :