அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை மூலம் சாதனை.

ம்பாறை, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இரு பிரிவுகளாக பிளந்த இரண்டு வயது குழந்தையின் ஆண் உறுப்பு பிளாஸ்ரிக் சத்திர சிகிச்சை மூலம் சீர்செய்யப்பட்டு வைத்தியத்துறையில் சாதனை செய்யப்பட்டுள்ளது.

இது பற்றி தெரியவருவதாவது,

வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயது குழந்தை அங்கு வைக்கப்பட்டிருந்த மின் இயக்கத்தில் துளையிடும் கருவியைக் கையில் எடுத்து தவறுதலாக இயக்கிய போது ஆண் உறுப்பு இரண்டாக பிளந்துள்ளது.

இதனையடுத்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு உடனடியாக டாக்டர் ஜெமில் தலைமையில் இயங்கிய வைத்தியக் குழுவினர் 1 1/2 மணிநேர பிளாஸ்ரிக் சத்திரசிகிச்சையை மேற்கொண்டு சாதனை செய்துள்ளார்.


தற்போது குழந்தை நலமாக வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றது.

சத்திர சிகிச்சை நிபுணர் ஜெமிலின் அயராத முயற்சியை வைத்தியசாலையில் பணிப்பாளர் எம்.எம்.தாஸீம் பாராட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :