வடக்கு-கிழக்கு மாகாண சபைகளை இணைப்பதற்கான சட்டமூலம் ஒழிக்கப்பட்டுவிட்டது.

டக்கு-கிழக்கு மாகாண சபைகளை இணைப்பதற்கான சட்டமூலம் தற்போது இல்லாதொழிக்கப்பட்டுவிட்டது.

எனினும் கிழக்கு மாகாண முஸ்லிம் மக்கள், வடக்கில் வாழும் தமிழ் மக்களுடன் இணைந்து வட-கிழக்கை இணைக்கும்நடவடிக்கையொன்றை மேற்கொள்ளலாம் என்ற அச்சம் அரசாங்கத்திடம் உள்ளது.

 என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

அதன் காரணமாகவே மாகாண சபைகளை இணைக்கும் தீர்மானத்தை எதிர்த்து பாராளுமன்றத்தில் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

எனினும் கிழக்கில் வாழும் முஸ்லிம்கள், தமிழ் மக்களுடன் இணைந்து போக நினைத்தாலும் அங்குள்ள சிங்கள மக்கள் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :