தெனியாய வாகன விபத்தில் 18 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரத்தினபுரி, இரக்குவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இரக்குவானை - தெனியாய வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 18 வயதான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

முச்சக்கர வண்டி வேக கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி பள்ளத்தினுள் விழுந்ததில் நேற்று (18) மாலை இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது படுகாயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி இரக்குவானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் 18 வயதான சூரியகந்த பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் என தெரியவந்துள்ளது.

இவரது சடலம் இரக்குவானை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரக்குவானை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :