அறிவுரை சொன்ன மதகுருவுக்கு பதில் கருத்து தெரிவித்த சவுதி அரேபிய பணக்கார பாடகி

வுதி அரேபியாவை சேர்ந்த பிரபல பின்னணி பாடகி ஆலம் (44) அந்நாட்டின் பணக்கார பாடகியாக உள்ளார்.

அரபு நாடுகளான துபாய், பஹரைன், கத்தார் மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு பறந்து பறந்து இசை நிகழ்ச்சிகளை நடத்தி வரும் இவருக்கு துபாய், எகிப்து, லண்டன் போன்ற நாடுகளில் சொகுசு மாளிகைகள் உள்ளன.

இவருக்கு சவுதி அரேபியாவை சேர்ந்த இஸ்லாமிய போதகர் ஷேக் முஹம்மது அல் உரைஃபி என்பவர் தனது “டுவிட்டர்” பக்கத்தில் ஓர் வேண்டுகோள் விடுத்தார்.

“எனது சகோதரி ஆலம், சர்வ வல்லமை படைத்த இறைவனின் மீது அன்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்திருப்பது உண்மை என்றால் இன்றிலிருந்து பாடுவதை நிறுத்திக் கொண்டு இஸ்லாமிய போதகராக மாறி எதிர்வரும் ரம்ஜான் நோன்பு காலத்தில் இறைவனின் நல்லருளைப் பெற வேண்டும் இதற்காக நான் இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று அவர் அறிவுரை கூறியிருந்தார்.

இதற்கு பதிலளித்து தனது “டுவிட்டரில்” கருத்து தெரிவித்த ஆலம், “எனது இசையையும் தொழிலையும் நான் தொடர்ந்து செய்யத்தான் வேண்டும். அதனை என்னால் விட்டுவிட முடியாது.

நீங்கள் என்மீது வைத்திருக்கும் அக்கறைக்கு உரிய சன்மானத்தை இறைவன் உங்களுக்கு அருள்வானாக ஏற்கனவே கூறியதுபோல் எனக்காக நீங்கள் வேண்டிக் கொண்டால் மட்டும் போதும்.

எனது பிரார்த்தனைகளையும் உங்களின் பிரார்த்தனைகளையும் இறைவன் ஏற்றுக் கொள்வானாக” என்று பதிலடி தந்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :