கமல் நடிக்கும் புதிய படத்துக்கு “உத்தம வில்லன்” என பெயர்.

விஸ்வரூபம் 2 படத்துக்கு பின் கமல் நடிக்கும் புதிய படத்துக்கு “உத்தம வில்லன்” என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஏற்கனவே கமலை வைத்து படம் எடுக்கப் போவதாக லிங்குசாமி அறிவித்து இருந்தார். மேலும் மெகா பட்ஜெட்டில் இப்படம் தயாராகும் என்றும் கூறியிருந்தார். 

தற்போது இதற்கான பணிகள் ஆரம்பமாகியுள்ளன. இந்த படத்துக்கு கிரேஸி மோகன் வசனம் எழுதுகிறார். எனவே நகைச்சுவை மிக்க கதையம்சத்தில் இப்படம் இருக்கும் என தெரிகிறது. 

நகைச்சுவை கதாப்பாத்திரத்தில் விவேக் நடிக்கிறார். விஸ்வரூபம் 2 படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. விரைவில் இப்படத்தை முடித்து விட்டு உத்தம வில்லன் படத்துக்கு கமல் வருகிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :