இரண்டு வருட ஓய்வுக்கு பிறகு நடிக்க வந்திருக்கிறார் வடிவேலு. கஜ புஜ புஜ கஜ தெனாலி ராமனும் கிருஷ்ணதேவராயரும் என்ற படத்தில் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதை யுவராஜ் இயக்குகிறார்.
இவர் ஏற்கனவே போட்டா போட்டி என்ற படத்தை இயக்கியவர். இதன் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கியது. ஒளிப்பதிவாளராக ஆர்தர் வில்சன் நியமிக்கப்பட்டார். ஷூட்டிங்கின்போது வடிவேலுவுக்கும், ஆர்தர் வில்சனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதையடுத்து ஒளிப்பதிவாளர் விலகி சென்றுவிட்டாராம். அதன்பிறகு வந்த ஒளிப்பதிவாளர்களும் விலகியதால் ஷூட்டிங் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பிரச்னை முற்றியதையடுத்து படம் கைவிடப்பட்டதாகவும், வடிவேலு மீண்டும் மதுரை சென்றுவிட்டதாகவும் கூறப்படுகிறது.
இது பற்றி பட குழுவினர் கூறும்போது, ‘ஆரம்ப கட்டத்தில் ஒளிப்பதிவாளருடன் பிரச்னை ஏற்பட்டது. அவருக்கு பதிலாக ராம்நாத் ஷெட்டி ஒளிப்பதிவாளராக பொறுப்பு ஏற்றார். சென்னையில் முதல்கட்ட ஷூட்டிங் முடிந்திருக்கிறது.
சில மீடியாக்காரர்கள் வடிவேலுவிடம் படம் பற்றி கேட்க முயன்றபோது அவர் பேச மறுத்துவிட்டதால் படம் டிராப் ஆகிவிட்டதாக வதந்தி பரப்புகிறார்கள். கடந்த வாரம்தான் இப்படத்தில் ராணி வேடத்தில் நடிக்க லதா ராவ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். விரைவில் அவரது காட்சிகள் படமாக்கப் பட உள்ளன என்றனர்.

0 comments :
Post a Comment