சாய்ந்தமருது வொலிவோரியன் வீட்டுத்திட்டத்தில் பொருளாதார அமைச்சின் கீழ்
சாய்ந்தமருது பிரதேச மக்களுக்காக கட்டப்படுகின்ற வீடுகளை பொருளாதார
அபிவிருத்தி பிரதி அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பார்வையிட்டார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸின் அழைப்பின்
பெயரில் வருகை தந்த பிரதி அமைச்சர் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களின்
குறைநிறைகளை கேட்டறிந்து கொண்டதோடு அதனை நிவர்த்தி செய்வதாகவும்
உறுதியளித்தார்.
மேற்படி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினரும்
பொறியியலாளருமான சிப்லி பாறுக், சவுதி நாட்டு மன்னரின் ஆலோசகர்களில் ஒருவரான
அஷ்ஷேக் எகியா பின் ரசிதி, சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம்
மற்றும் பிரமுகர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.


0 comments :
Post a Comment