இந்திய மருத்துவரின் ஆலோசனைப்படி சிறு நீர் அருந்தும் அமைச்சர் மேவின் சில்வா.


பொதுமக்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மேர்வின் சில்வா அண்மைய நாட்களின் தனது சிறுநீரை அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது.

இந்திய ஆயுர்வேத வைத்தியர்களின் ஆலோசனையின் பேரிலேயே அவர் தனது சிறுநீரை அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. இவர் நாளாந்தம் பல தடவைகள் சிறுநீர் அருந்துவதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் நேற்று அமைச்சர் மேர்வின் சில்வா ஊடகவியலாளர் ஒருவருக்குக் கருத்துத் தெரிவிக்கையில், இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயும் சிறுநீர் அருந்தியதனை நினைவூட்டியதுடன் அதனடிப்படையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக தானும் தனது சிறுநீரை அருந்தி வருவதாகவும் அதன் மூலம் சாதகமான தன்மைகள் காணப்படுவதாகவும் கூறினார்.

ஆனால் தான் முழுமையான சிறுநீரை மட்டும் அருந்தவில்லை எனவும் அதில் குறிப்பிட்டளவு நீரும் கலந்தே அருந்தி வருவதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :