ஏறாவூர் பகுதியில் முஸ்லிம் இரும்பு வியாபரி ஒருவர் தமிழ் சிறுமியை பாலியல் கொடுமைப்படுத்தியதான செய்தியை பிரசுரித்த தினக்கதிர் என்ற இணைய ஊடகம் இந்தச்செய்தியுடன் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும் படத்தை பிரசுரித்தமை கண்டித்தக்கதாகும் என முஸ்லிம் மக்கள் கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளார்.
மேற்படி செய்தியில் உள்ள படம் சம்பந்தமாக முஸ்லிம் ஊடகவியலாளர் ஒருவர், முஸ்லிம் மக்கள் கட்சியின் கவனத்துக்கு கொண்டு வந்ததையடுத்து இதனை பார்வையிட்ட பின் வெளியிட்ட கண்டன அறிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாலியல் வல்லுறவு சம்பந்தமான செய்திகளில் முஸ்லிம்கள் சம்பந்தப்படுவது மிக மிக குறைவானதாகும். இச்செயலில் ஈடுபட்டவர் யாராக இருந்தாலும் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டனையளிக்கப்பட வேண்டும். ஆனால் இது சம்பந்தமான செய்தியை ஒரு சமூகத்தின் பெயரால வெளியிடுவதன் மூலம் இன்னமும் தமிழ் முஸ்லிம்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் இனவாத சக்திகள் இருப்பதாகவே தெரிகிறது.
மேற்படி செய்தியை வெளியிடும் போது அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் முஸ்லிம்கள் தொழுகையில் ஈடுபடும் புகைப்படத்தை பிரசுரித்தமை கண்டிக்கத்தக்கதாகும். தமிழ் மக்களில் சிலர் செய்யும் குற்றங்கள் அடிக்கடி ஊடகங்களில் வருகின்றன. அண்மையில் ஏறாவுர் செங்கலடியில் பெற்ற மகளே பெற்றோர் கொலைக்கு உடந்தையாக இருந்த செய்தி உலகையே அதிர்ச்சிக்கள்ளாக்கியது.

இந்த செய்தியை பிரசுரிக்கும் முஸ்லிம் ஊடகம் தமிழ் மக்கள் கோயிலில் கும்பிடும் புகைப்படத்தை பிரசுரித்தால் அதனை தமிழ் மக்கள் ஜீரணிப்பார்களா என கேட்கின்றோம்.
இவ்வாறு முஸ்லிம் சமூகத்தை கொச்சைப்படுத்தும் மேற்படிஊடகத்தின் செயல் அதன் வக்கிரப்புத்தியையும்; இனத்துவேசத்தையுமே காட்டுகிறது. ஆகவே இதனை பிரசுரித்த மேற்படி ஊடகத்தின் செயலை நாம் வன்மையாக கண்டிப்பதுடன் இது சம்பந்தமாக ஊடக அமைச்சும் கவனமெடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றொம் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment