(நப்றிஸ்)
கல்முனைப்பிரதேசத்தில் ”ஒளிரும் கல்முனை- திதுலன” என்ற தொனிப்பொருளில் 51 திட்டங்கள் அடங்கலான பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் அமுல்படுத்துவதற்கான
திட்டங்களை திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸினால் முன்னெடுத்துச் செல்லப்பட இருக்கின்றது.
இத்திட்டங்கள்பற்றி தெளிவு படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு எச்.எம்.எம்.
ஹரீஸின் தலைமையில் இன்று (17) சாய்ந்தமருது பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.எம். பறக்கத்துள்ளாஹ், ஏ.ஏ. பஷீர், ஏ.நஸார்தீன், எம்.ஐ.எம். பிர்தௌஸ், எம்.எஸ். உமர் அலி, ஏ.ஆர். அமீர், எம்.எல். சாலிதீன் உட்பட பட்டதாரி பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், அம்பாரை மாவட்ட ஊடகவியலாளர்கள், பாராளுமன்ற உறுப்பினரின் செயலாளர் எம். அலி ஜின்னா, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் கல்முனை மத்திய குழுத்தலைவர் எம்.ஐ.ஏ.கரீம் உட்படப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment