அசாத் சாலிக்கு மரண தண்டனை வழங்குமாறு பொதுபல சேனா கோரிக்கை.


தேசிய ஐக்கிய முன்னணியின் பொதுச் செயலாளர் அசாத் சாலிக்கு இஸ்லாமிய ஷரீஆ சட்டப்படி மரண தண்டனை வழங்குமாறு பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் டிலந்த விதானகே  தெரிவித்தார்.

கல்முனையில் பொதுபல சேனாவின் கூட்டம் நடைபெறுவது குறித்து டிலந்த விதானகேயை தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தாவது;

பொதுபல சேனாவின் செயற்பாடுகள் குறித்தும், அண்மைக்கால அரசியல் ரீதியான விடயங்களிலும் பொய்களைக் கூறி அரசியல் இலாபம்பெற முயற்சிக்கிறார். பொதுபல சேனாவின் கூட்டம் கல்முனையில் நடைபெறவுள்ளதாக பொய்களைப் பரப்பி வருகிறார்.

இஸ்லாமிய ஷரீஆ சட்டத்தின்படி பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுவது இஸ்லாமிய நெறிமுறைகளுக்குப் பொருத்தமில்லாத மிகப்பெரிய குற்றமாகும். அவர் தனது சமுதாய மக்களையே பொய்களைக்கூறி ஏமாற்றிப் பிழைக்கிறார்.

அடிக்கடி பொய்களைக்கூறி மக்களை ஏமாற்றப்போய் சட்டத்தின் பிடியில் சிக்கி ஜனாதிபதியின் மன்னிப்பில் விடுதலையானார். இப்போது மீண்டும் பழைய பல்லவியைத் தொடங்கியிருக்கிறார். இந்த நிலையில் மீண்டும் அவரால் முஸ்லிம் மக்களை ஏமாற்ற முடியாது. முஸ்லிம்களே அவருக்கு ஷரீஆ சட்டப்படி மரண தண்டனை வழங்கவேண்டும்.

அசாத் சாலி கொழும்பு டி.எஸ். சேனாநாயக்க கல்லூரியில் கல்வி கற்கும் காலங்களில் பள்ளித் தோழராக இருந்தார். அப்போதும் அவருக்கு பொய் கூறும் பழக்கம் இருந்தது. இப்போதும் அவர் அதைத்தான் செய்துவருகிறார். அதற்காக நான் கவலைப்படுகிறேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.navamani
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :