உங்களுக்கும் வெள்ளை முடி வருகிறதா பயப்பட வேண்டாம் உடனடி மருந்து.


தேசமயம் இந்த மருந்து நிரந்தரமாக ஒருவரின் உடல்முடிகள் நரையாவதை தடுக்க முடியுமா என்பது குறித்து இந்த ஆய்வாளர்களால் உறுதியான விடையை கொடுக்கமுடியவில்லை. இந்த குறிப்பிட்ட மருந்தை இவர்கள் கண்டுபிடித்த விதமே சுவாரஸ்யமானது.

விடிலிகோ என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் தோலில் வெண்புள்ளிகள் தோன்றும் நோய்க்கான சிகிச்சை முறைகள் தொடர்பின் ஒரு பகுதியாக இந்த ஆய்வாளர்கள் இந்த மருந்தை வடிவமைத்தார்கள். இயற்கையில் மனிதர்களின் தோலில் காணப்படும் மெலானின் என்கிற நிறத்துகள்கள் தோலின் சில இடங்களில் இல்லாமஏல் போவதால் இந்த வெள்ளைத்தழும்புகள் உருவாகின்றன.

தோல் மற்றும் கண்ணின் இமைகள், புருவங்களில் காணப்படும் வெள்ளைத்தழும்புகளை குணப்படுத்துவதற்காக இவர்கள் புதிய மருந்தை கண்டுபிடித்தனர். இது குறிப்பிட்ட நோயாளிகளிடம் நல்ல பலனை தந்ததை கண்ட ஆய்வாளர்கள், இந்த மருந்தை கொஞ்சம் மாற்றி அதை பயன்படுத்தி மனிதர்களின் முடியில் உருவாகும் நரையை குணப்படுத்த முடியுமா என்று ஆராய்ந்தபோது அதுவும் சாத்தியம் என்பதை தாங்கள் கண்டறிந்ததாக இவர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதுநாள்வரை நரைமுடியை மறைப்பதற்கான வழிகள் மட்டுமே வெற்றிபெற்றிருப்பதாக தெரிவிக்கும் மருத்துவ சஞ்சிகையான பேசப் ஜர்னலின் தலைமை ஆசிரியர் ஜெரால்ட் வீஸ்மென், முதல்முறையாக, வெள்ளைமுடியை அதன் வேரிலிருந்து குணப்படுத்தக்கூடிய ஒரு சிகிச்சை முறைக்கான சாத்தியம் உருவாகியிருப்பதாக தெரிவிக்கிறார்.

இந்த மருந்து நரைமுடியையும் தோலில் ஏற்படும் வெண்புள்ளி நோயையும் ஒருசேர குணப்படுத்துவது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தி என்கிறார் இவர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :