அட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு நிகழ்வு.

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ட்டாளைச்சேனை பிரதேச சபை ஏற்பாடு செய்த டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டம் இன்று (2013.06.18) மீலாத் நகர் சனசமூக நிலைய சிறுவர் பூங்காவில் நடைபெற்றது.
அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் நடைபெற்ற டெங்கு ஒழிப்பு சிரமதான வேலைத்திட்டத்தில் பிரதேச சபை செயலாளர் ஏ.அப்துல் சித்தீக், சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள், மீலாத் நகர் அல் - ஜெஸீரா வித்தியாலய அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

நாட்டில் தற்போது வேகமாகப் பரவிவரும் டெங்கு நோயிலிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் பல்வேறுபட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில் அட்டாளைச்சேனை பிரதேச சபையும் டெங்கு ஒழிப்பிற்காக பல வேலைத்திட்டங்களை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பிரதேசங்களில் முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு கட்டமாகவே மீலாத் நகரில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் செயற்படுத்தப்பட்டது. மீலாத் நகர் அல் - ஜெஸீறா வித்தியாலயத்திற்கு முன்பாக இச்சிறுவர் பூங்கா காணப்படுவதால் மாணவர்கள் இச்சிறுவர் பூங்காவை பயன்படுத்துவதற்கு வாய்ப்பேற்பட்டுள்ளதாக அதிபர் எம்.ஐ.எம்.றியாஸ் இதன்போது தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :