ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு தன்சானியா சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, இன்று சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டில் பங்குபற்றவுள்ளார்.
தன்சானியாவின் தார் ஸ் சலாம் நகரில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது.
பல்வேறு நாடுகளின் அரச தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்குபற்றவுள்ளதாக ஜனாதிபதியின் பேச்சாளர் மொஹான் சமரநாயக்க கூறியுள்ளார்.
நவீன உலகில் தொழில்நுட்ப போக்குவரத்து தொடர்பாடல் துறைகளின் முன்னேற்றத்தை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் பயன்படுத்துவது தொடர்பில் இன்றைய மாநாட்டில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை ஜனாதிபதி நேற்று தன்சானியா ஜனாதிபதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.



0 comments :
Post a Comment