
விளையாட்டுத் துறையில் பல சாதனைகளை நிலைநாட்டிய நிந்தவூர் அல்-அஷ்ரக் தேசிய பாடசாலை உயர்தர வர்தகப் பிரிவு மாணவன் எம் .எஸ்.எம்.நுஸ்கி கண்டி வைத்தியசாலையில் காலமானார்.
இவரது ஜனாஸா நல்லட்டக்கம் இன்று காலை இடம்பெறும் என அறிவிக்கப்படுகிறது.
இவரது திடீர் மறைவுக்கு திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் ஆழ்ந்த அனுதாபம் தெரிவித்துள்ளார்.
இவர் கடந்த 2011ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண
பாடசாலைகளிற்கிடையிலான விழையாட்டுப் போட்டிகளில் முப்பாய்ச்சல் உட்பட பல போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தைப் பெற்று மாகாணத்தின் முதல்தர விளையாட்டு வீரன் என்ற பட்டத்தை பெற்றுக் கொண்ட மாணவன்.
கல்வியிலும் சிறந்து விளங்கிய இந்த மாணவன் அதே ஆண்டு ஹோமாகம,மஹிந்த ராஜபக்ச விளையாட்டரங்கில் நடைபெற்ற அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டியில் 17 வயதுப் பிரிவின் கீழ் பங்குபற்றி ,முப்பாய்ச்சல் போட்டியில் 14.65மீட்டர் பாய்ந்து புதிய சாதனை படைத்து தங்கப் பதக்கம் வென்றார்.
இவற்றின் மூலம் தனது பாடசாலைக்கு மட்டுமல்லாமல் நிந்தவூர் பிரதேசத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் புகழை ஈட்டிக்கொடுத்தார்,
கல்வியிலும் விளையாட்டுத் துறையிலும் ஏனைய மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்து வந்த இம்மாணவன் எம்மை விட்டு மறைந்த போதிலும் வரலாற்றில் அவரது பெயர் என்றும் மறையாமல் ஒளி வீசும் என்பது திண்ணம்.
இத்தகைய சாதனை வீரன் ஒருவரை இந்த மண் இழந்திருப்பதானது எமக்கு பேரிழப்பாகும் என நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் குறிப்பிட்டுள்ளார்.
0 comments :
Post a Comment