பாதியில் உதிரவிருந்த பல உயிர்களை இரத்த தானம் மூலம் காப்பாற்ற உழைத்த மூன்று சகோதரர்கள் அண்மையில் ஜனாதிபதியினால் கௌரவிக்கப்பட்டனர்.
உன்னதமான இந்த பணியில் தேசிய இரத்ததான சேவையுடன் இணைந்து பணியாற்றிய மூவரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டவர்களாவர் ,
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதி கூடிய எண்ணிக்கையான இரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்த செ. பிரான்சிஸ், அதி கூடிய அளவில் இரத்த தானம் செய்தவர்களான வெ. கிறிஸ்ரி மற்றும் அ. கோகுலன் ஆகியோரே இவ்வாறு கௌரவிக்கப்பட்டனர்.
இரத்த தான சாதனையாளர்களை கௌரவிக்கும் இந்த நிகழ்வு உலக இரத்த தான தினத்தன்று இடம்பெற்றது.

0 comments :
Post a Comment