வேறொருவரின் பெயரில் எடுத்த சிம் முபைல் கட்டணமாக 32 இலட்சம் ரூபா.


கையடக்க தொலைபேசி கட்டணமாக 32 இலட்சம் ரூபாவை செலுத்தாத நபர் தொடர்பில் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. கையடக்கதொலை பேசியின் சிம்காட்க்கு ரோமிங் வசதியை பெற்றுக்கொண்ட நபரொருவர் 24 மணித்தியாலயத்திற்குள் 32 இலட்சம் ரூபாவிற்கு பேசியுள்ளமை தொடர்பிலேயே கொழும்பு ஊழல் மோசடி தடுப்பு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் அது தொடர்பில் நீதிமன்றின் கவனத்திற்கு நேற்று கொண்டுவந்தனர்.

கண்டி, திகனையை பிறப்பிடமாக கொண்ட எம்.முஹமட் மஹ்ரூப் என்பவரே 32 இலட்சம் ரூபாவிற்கான தொலைபேசி கட்டணத்தை செலுத்தவில்லை என்றும், 24 மணி நேரத்திற்குள் குறித்த நபர் 501 அழைப்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கையடக்க தொலைபேசி நிறுவனம் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தது.

சந்தேநபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி குறித்த நபர் சிம்காட்டை இத்தாலியிலுள்ள தன்னுடைய உறவினருக்கு கொடுத்துவிட்டதாகவும் அவர் அந்த சிம்காட் அட்டையை ஒருபோதும் பயன்படுத்தவில்லை என்றும் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

ஒருவர் தன்னுடைய பெயரில் பெற்றுக்கொண்ட சிம்காட் அட்டையை கைமாற்ற முடியாது என்று குறித்த கையடக்கதொலைபேசி நிறுவனத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார். இந்நிலையில், சந்தேகநபருக்கு எதிராக ஒக்டோபர் 1 ஆம் திகதி குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யுமாறு நீதவான் திலின கமகே பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :