இலங்கை 2015இல் பெரிய வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிடும்-அமைச்சர் பெசில்


2015 ஆம் ஆண்டில் இலங்கை பெரிய வெங்காய உற்பத்தியில் தன்னிறைவு அடைந்துவிடும் எனவும் வெளி நாடுகளில் இருந்து பெரிய வெங்காய இறக்குமதி நிறுத்தப்படும் என்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

பெரிய வெங்காயம், கிழங்கு, சின்ன வெங்காயம் ஆகியவற்றின் உற்பத்தியில் இலங்கையை தன்னிறைவு அடையச் செய்யும் செயலணி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பொருளாதார அவிவிருத்தி அமைச்சில் நேற்று நடைபெற்ற கூட்டத்திலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.

சிரேஷ்ட அமைச்சர் எஸ்.பி. நாவின்ன, விவசாய அமைச்சர் மஹிந்த யாப்பா அபேவர்தன ,அமைச்சர் ரெஜினோல் குரே ஆகியோர் உட்பட உயர் மட்ட அதிகாரிகள் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அமைச்சர் தொடரந்தும் உரையாற்றுகையில்,

இலங்கைக்கு இரண்டு லட்சம் மெற்றிக் தொன் பெரிய வெங்காயம் வருடாந்தம் இறக்குமதி செய்யப்படுகின்றது. இதற்காக 6 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படுகின்றது.

இந்தப் பயிர் வகைகளை இலங்கையில் உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ஊக்கமளித்தால் நாடு தன்னிறைவடையும்.

தற்போது அரிசி- சோளம் மற்றும் உளுந்து உற்பத்தியில் நாடு தன்னிறைவடைந்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :