இறக்காமம் பிரதேச இளைஞர் கழக விளையாட்டு விழா-2013

 ஏ.எச்.எம் இம்தியாஸ் இறக்காமம்.

றக்காமம் பிரதேச இளைஞர் கழக விளையாட்டுப் போட்டி 2013.06.01ம் திகதி இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.சுந்தரலிங்கம் தலைமையில் இறக்காமம் குளக்கரை மைதானத்தில் இடம்பெற்றது. இநத நிகழ்வில் பிரதம அதீதியாக இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர் அவர்கள் கலந்து சிறப்பித்தார்கள். 

விசேட அதீதிகளாக இறக்காமம் பிரதேச சபை உறுப்பினர் எம்.எஸ்.ஜெமில் காரியப்பர், இறக்காமம் பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர்களான ஐ.எல்.எம்.றஷாக், பி.எம்.அஸீஸ், மாவட்ட இளைஞர் சேவை உத்தியோகத்தர் ஏ.எச்.உமர்லெவ்வை, இறக்காமம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (ழ.iஉ) சுனில் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதீதிகளின் வரவேற்பைத் தொடர்ந்து இளைஞர் சேவை உத்தியோகத்தர் கே.சுந்தரலிங்கம் அவர்களினால் தலைமை உரையாற்றப்பட்டது. 

அதனைத்தொடர்ந்து அதீதிகளின் உரையும் வெற்றிபெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கிவைக்கப்பட்டது. 

இறுதியாக இளைஞர் பா.உறுப்பினரும் கழக சம்மேளனத் தலைவருமான யு.எல் அஸபஹான் அவர்களின் நன்றியுரையுடன் இந் நிகழ்வு இனிதே நிறைவு பெற்றது. (படங்கள் இணைக்கப்பட்டுள்ளது)






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :