சிங்கம் 2 இன் வெளியீட்டுத் திகதி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஆந்திராவில் யமுடு 2 என்ற பெயரில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக ஹைதராபாத் சென்றார் சூர்யா.கேரளாவில் சிங்கம் 2 அதே பெயரில் வெளியாகிறது. சிங்கம் கேரளாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றதால் கொச்சி சென்று சிங்கம் 2 ஐ, சூர்யா ப்ரமோட் செய்தார்.
இவரின் வருகையையொட்டி ஆந்திரா, கேரளா பத்திரிகைகள் படம் ஜூன் 28 வெளியாகும் என எழுதின. சம்பந்தப்பட்டவர்கள் அதனை மறுக்கவில்லை.
அதனால் படம் ஜூன் 28 வெளியாகும் என தமிழகத்திலும் நம்பியிருந்தனர். இந்தநிலையில் படத்தின் வெளியீடு ஜூலை 5க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரவி தேஜா நடித்திருக்கும் பலுபு தெலுங்கு படம் ஜூன் 28 வெளியாகிறது. நேரடி தெலுங்குப் படம் வெளியாகும் போது தமிழ்ப் படங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.
அதன் காரணமாக ஒருவாரம் யமுடு 2 வின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும்,அதே திகதியில் சிங்கம் 2 வும் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
0 comments :
Post a Comment