சிங்கம் 2 இன் வெளியீட்டு அறிவிக்கப்படவில்லை கேரளாவில் சிங்கம் 2 அதே பெய‌ரில்.

சிங்கம் 2 இன் வெளியீட்டுத் திகதி இன்னும் அதிகார பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்தநிலையில் ஆந்திராவில் யமுடு 2 என்ற பெய‌ரில் வெளியாகும் இந்தப் படத்தின் ப்ரமோஷனுக்காக ஹைதராபாத் சென்றார் சூர்யா.

கேரளாவில் சிங்கம் 2 அதே பெய‌ரில் வெளியாகிறது. சிங்கம் கேரளாவில் மிகப்பெ‌ரிய வெற்றியை பெற்றதால் கொச்சி சென்று சிங்கம் 2 ஐ, சூர்யா ப்ரமோட் செய்தார்.

இவ‌ரின் வருகையையொட்டி ஆந்திரா, கேரளா பத்தி‌ரிகைகள் படம் ஜூன் 28 வெளியாகும் என எழுதின. சம்பந்தப்பட்டவர்கள் அதனை மறுக்கவில்லை.

அதனால் படம் ஜூன் 28 வெளியாகும் என தமிழகத்திலும் நம்பியிருந்தனர். இந்தநிலையில் படத்தின் வெளியீடு ஜூலை 5க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக புதிய தகவல்கள் தெ‌ரிவிக்கின்றன.
ரவி தேஜா நடித்திருக்கும் பலுபு தெலுங்கு படம் ஜூன் 28 வெளியாகிறது. நேரடி தெலுங்குப் படம் வெளியாகும் போது தமிழ்ப் படங்களை அவர்கள் அனுமதிப்பதில்லை.

அதன் காரணமாக ஒருவாரம் யமுடு 2 வின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகவும்,அதே திகதியில் சிங்கம் 2 வும் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :