கிழக்கு மாகாண சபையின் தற்போதைய நிலைமை தொடர்பாக எந்த விதமான பத்திரிகையாளர் மாநாடும் இதுவரை நடாத்தப்படவில்லை.
கிழக்கு மாகாண அமைச்சரவைப் பேச்சாளரும்
வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை.
கிழக்கு மாகாணசபையின் மாதாந்த கூட்டம் கடந்த 21.05.2013ம் திகதி தவிசாளர் ஆரியவதி கலப்பதி தலைமையில் நடைபெற்றது.
தேநீர் இடைவெளிக்காக சபை ஒத்திவைக்கப்பட்ட வேளையில் ஆளும்கட்சி உறுப்பினர்களின் குழுக்கூட்டம் முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபையின் நடவடிக்கைகளில் அண்மைக்காலமாக ஏற்பட்ட பிரச்சினை தொடர்பாக நீண்ட நேரம் ஆராயப்பட்டது. இந்நிலையில் கிழக்கு மாகாண சபை நான்கு அமைச்சர்களும், ஆளும்கட்சி மாகாணசபை உறுப்பினர்களும் அண்மைக்கால கிழக்கு மாகாண சபை நடவடிக்கை தொடர்பாக ஒற்றுமையாக செயற்பட்டு இப்பிரச்சினைக் குறித்து பேச்சுவார்த்தைகள் ஊடாக தீர்வு காண்பதென தீர்மானிக்கப்பட்டது.
மீண்டும் தேநீர் இடை வேளையின் கூடிய சபை நடவடிக்கைகள் எதிர்வரும் 18.06.2013 வரை தவிசாளரால் ஒத்திவைக்கப்பட்டது.
இவ்வாறான சூழ்நிலையில் இச் சம்பவங்கள் தொடர்பாக ஊடகவியலாளர்கள் பல தடவைகள் எங்களிடம் கேட்ட போதும் நாங்கள் எவ்விதமான கருத்துக்களும் தெரிவிக்காமல் புதிதாக எழுந்துள்ள பிரச்சினைக்கு பேசித் தீர்வுகான வேண்டும் என்ற நிலைப்பாட்டில் தான் நாம் இன்றும் இருக்கின்றோம். இந்த நிலையில் அண்மையில் சில பத்திரிகைளில் அம்பாறை கிழக்கு மாகாணசபையின் நடவடிக்கைகள் தொடர்பாக பத்திரிகையாளர் மாநாடு கூட்டப்பட்டு நானும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் விமலவீர திஸநாயக்க அவர்களும் தெரிவித்தாக வெளியிடப்பட்டுள்ள செய்தியானது முற்றிலும் பொய்யானதாகும்.
கடந்த 06.06.2013ம் திகதி காலை 10.30 மணியளவில் தமன பிரதேச சபையில் புதிய கட்டிடம் அமைப்பது தொடர்பாக முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் தலைமையில் தமன பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நானும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சருமான விமலவீர திஸநாயக்க அவர்களும் மாகாணசபை உறுப்பினர்களான திரு வீரசிங்க, ஏ.எல்.எம். நசீர், அம்பாறை மாவட்ட உதவி உள்ளுராட்சி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்சாத், தமன பிரதேசசபை தவிசாளர், பிரதித் தவிசாளர், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வுதான் அம்பாறை, தமன பிரதேசத்தில் இடம்பெற்றது.
இதனை சில பத்திரிகைகளில் கிழக்கு மாகாணசபை நடவடிக்கை தொடர்பாக அம்பாறையில் நடைபெற்ற பத்திரிகையாளர் மாநாட்டில் நானும் கிழக்கு மாhகண கல்வி அமைச்சரும் இணைந்து அறிக்கை விட்டதாகவும் கூறப்படும் செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும். கிழக்கு மாகாண அமைச்சர்களும் ஆளும் கட்சி உறுப்பினர்களும் கூட்டுப் பொறுப்புடன் செயற்பட்டு வருகின்றோம்.
கிழக்கு மாகாணசபை நடவடிக்கைகள் தொடர்பாக இதுவரை எவ்விதமான பத்திரிகையாளர் மாநாடு எங்கும் நடைபெறவில்லை எனவும், பத்திரிகையாளர் மாநாட்டின் மத்தியில் எவ்விதமான கருத்துக்களும் எங்களால் தெரிவிக்கப்படவுமில்லை எனவும் தெரிவித்துக்கொள்கின்றேன். கிழக்கு மாகாணசபை நடவடிக்கைகளில் பிரச்சினைகள் எழுந்துள்ளது.
அவைகள் தொடர்பாக ஆளும் கட்சியினர் பொறுப்புடனும் ஒற்றுமையுடனும் செயற்பட்டு இப் பிரச்சனைக்கு தீர்வுகாண தீர்மானித்துள்ள இந்நிலையில் சில பத்திரிகைகளில் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிட்டு கிழக்கு மாகாண அமைச்சர்கள், ஆளும் கட்சி உறுப்பினர் மத்தியில் பிரிவினையையும், குழப்பத்தையும் ஏற்படுத்த சிலர் முயற்சிப்பது வேதனைக்குரிய விடயமாகும் எனக் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment