மாதிவலயில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கான வாடகை கட்டணத்தை செலுத்தாததாக கூறப்படும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 19 பேருக்கு நுகேகொட மாவட்ட நீதிமன்றத்தினால் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
ஜுலை 19 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்பிவைக்குமாறு நுகேகொட நீதவான் நாமல் பண்டார பலல நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளார்.
2001 ஆம் ஆண்டு டிசெம்பர் 05 ஆம் திகதி முதல் 2004 ஆம் ஆண்டு பெப்ரவரி 07 ஆம் திகதிவரை மாதிவல உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் தங்கியிருந்து வாடகை செலுத்தாத நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே இவ்வாறு அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
மஹிபால ஹேரத்,
டி.எம்.பண்டாரநாயக்க,
ராசா குகனேஷ்வரம்,
சஞ்ஜீவ பண்டார கவிரத்ன,
ஸ்ரீ ஆனந்திரா ஹெந்ததி,
சுரேஷ் சதாசிவம்,
சந்தன கதிரியாராச்சி,
திலின பண்டார தென்னக்கோன்,
பதிரனகே தொன் அபேரத்ன,
மொஹமட் அப்துல்ல மஹ்ரூப்,
மொஹிதீன் பாவா அப்துல் அஸீஸ்,
வண.பத்தேகம சமிந்த தேரர்,
உபாலி சமரவீர,
ஜஸ்டின் கலப்பத்தி,
லக்கி ஜயவர்தன,
தம்பி மொஹமட்,
மொஹமட் அப்துல்லா
மொஹமட்
ஆகியோருக்கே இவ்வாறு நீதிமன்றத்தினால் அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

0 comments :
Post a Comment