டெல்லி, உத்தர பிரதேசம், ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட வட பிராந்திய மாநிலங்களில் கடந்த சில நாட்களாகக் கடும் மழை பெய்து வருகின்றது.
கங்கை, யமுனை, மண்டோதரி உள்ளிட்ட ஆறுகள் எப்போதும் இல்லாத அளவிற்கு பெருக்கெடுத்துள்ளதால் ஆற்று ஓரங்களில் காணப்பட்ட குடியிருப்புக்கள் மற்றும் ஆற்றுப் பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன.
ஹிமாச்சலப் பிரதேசத்தில் மூன்று நாட்களுக்கும் அதிகமாக மண் சரிவில் சிக்கியிருந்த மாநில முதலமைச்சர் வீரபத்திர சிங், 60 மணிநேர போராட்டத்திற்குப் பின்னர் நேற்று மீட்கப்பட்டதாக சன் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, உத்தரகண்டில் கேதாரநாத் மற்றும் பத்ரிநாத் உள்ளிட்ட பகுதிகளில் சிக்கியுள்ள 70,000ற்கும் அதிகமான பக்தர்களை இராணுவத்தினர் ஹெலிகொப்டர் மூலம் மீட்டு வருகின்றனர்.
0 comments :
Post a Comment